மாநகராட்சி வீடற்ற ஏழைகள் மற்றும் முதியோர் காப்பதில் மாதம் 1500 ரூபாய் கட்டணம் செலுத்தி முதியோர்களை சேர்க்க வேண்டும் - அரசு முதியோர் இல்லத்தை நடத்தும் அறக்கட்டளை நிர்வாகி - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday, 5 July 2024

மாநகராட்சி வீடற்ற ஏழைகள் மற்றும் முதியோர் காப்பதில் மாதம் 1500 ரூபாய் கட்டணம் செலுத்தி முதியோர்களை சேர்க்க வேண்டும் - அரசு முதியோர் இல்லத்தை நடத்தும் அறக்கட்டளை நிர்வாகி


மாநகராட்சி வீடற்ற ஏழைகள் மற்றும் முதியோர் காப்பதில் மாதம் 1500 ரூபாய் கட்டணம் செலுத்தி முதியோர்களை சேர்க்க வேண்டும் - அரசு முதியோர் இல்லத்தை நடத்தும் அறக்கட்டளை நிர்வாகி.


மாநகராட்சி வீடற்ற ஏழைகள் மற்றும் முதியோர் காப்பகத்தில்  இருக்கும் முதியவர்களை அடித்து துன்புறுத்துவதாக அங்குள்ள முதியவர்கள் மதுரை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு மொட்ட கடுதாசி எழுதியதால் பரபரப்பு.


மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட திருநகர் 1வது பேருந்து நிறுத்தம் பகுதியில் மதுரை மாநகராட்சி தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மதுரை மாநகராட்சி மற்றும் ஸ்வீட் அறக்கட்டளை இணைந்து நடத்தும் நகர்ப்புற வீடற்ற ஏழைகள் தங்கு விடுதி செயல்பட்டு வருகிறது. இதில் முதியவர்களை சேர்க்க வேண்டும் என்றால் அறக்கட்டளைக்கு சேர்க்கும் முதியவர்களுக்கு நன்கொடையாக 3000 ரூபாயும் மாதம் கட்டணமும் செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.



இந்த தங்கும் விடுதியை நடத்தி வரும் ஸ்வீட் அறக்கட்டளை நிர்வாகி கோவிந்தராஜ் இந்த விடுதியில் முதியவர்களை சேர்க்க வேண்டும் என்றால் முன்பணமாக 3000மும் பின்னர் மாதம் 1500 ரூபாயும்  அறக்கட்டளைக்கு கட்ட வேண்டும் என்று தெரிவித்தார்


மேலும் இந்த முதியோர் இல்லத்தில் அனைத்து வசதிகளும் உள்ளது. வேண்டுமென்றால் இங்கு தங்கி இருப்பவர்களிடம் விசாரித்துக் கொள்ளுங்கள் என்றும் தெரிவித்தார் மேலும் இந்த விடுதிக்கு அரசு தரப்பில் கட்டிடம் மட்டுமே தந்துள்ளது மற்றபடி மின்சார வசதி சாப்பாடு வசதி போன்றவை அறக்கட்டளை தான் செய்து வருகிறது எனவே அறக்கட்டளைக்கு மாத மாதம் 1500 ரூபாய் பணம் கட்ட வேண்டும் என்றார்.



இது ஒரு புறம் இருக்க மற்றொருபுறம் இந்த விடுதியில் தங்கி இருக்கும் முதியவர்கள் மதுரை மாநகராட்சி ஆணையருக்கு மொட்டை கடுதாசி ஒன்று எழுதி உள்ளனர்: அதில் ஐயா இந்த இல்லத்தை நடத்தி வருபவர் கோவிந்தராஜ் அவரது தம்பி கிருஷ்ணன் எங்களை அடித்து துன்புறுத்துகிறார் கேவலமாக பேசுகிறார் இங்கே நாங்கள் 60,70 மேல் வயதானவர்கள் 30 பேருக்கு மேல் இங்கு உள்ளோம் இங்கு பணியாட்கள் யாரும் இல்லை வயதான எங்களை பாத்திரம் கழுவுவது சமையல் செய்வது என அனைத்து வேலைகளும் செய்ய சொல்கிறார்கள் மிகவும் கேவலமாக நடத்துகிறார்கள் எங்கள் வீட்டில் இதை சொன்னாலும் அவர்களும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை வயதான காலத்தில் இவ்வளவு கொடுமை அனுபவிக்க வேண்டியதாக உள்ளது. வேறு வழி தெரியவில்லை அதனால் தான் மொட்ட கடுதாசி அனுப்பி உள்ளம் எங்களை காப்பாத்துங்க சார்  இதுவும் தெரிந்தால் எங்களை அடித்தே கொன்றுவாங்க சார் இப்படிக்கு உதிரப்போகும் இலைகள் என்று குறிப்பிட்டுள்ளது மேலும் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்கிறோம் எங்களை காப்பாத்துங்க கடவுளே எங்களை சீக்கிரமா கொண்டு போ என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டது நகல் என்று மாண்புமிகு முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர், தலைமை நீதிபதி அவர்கள் மாநகர காவல் ஆணையாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர் அவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


அரசு உதவி பெறும் முதியோர் இல்லத்தில் தங்கி இருக்கும் முதியவர்களை முதியோர் இல்லத்தை நடத்தி வரும் அறக்கட்டளையை சேர்ந்தவரின் தம்பி அடித்து துன்புறுத்துவதாக முதியவர்கள் எழுதிய மொட்டை கடுதாசி மற்றும் முதியவர்களை இல்லத்தில் சேர்ப்பதற்கு அறக்கட்டளைக்கு மாத மாதம் பணம் செலுத்த வேண்டும் என்று கூறும் அறக்கட்டளை நிர்வாகியின் செயல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அது மட்டுமல்லாது அரசு இந்த முதியோர் இல்லத்திற்கு மாதம் 40 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை குறிப்பிட்ட கட்டணத்தை வழங்கி வருகிறது இருப்பினும் இங்கு முதியோர்களை சேர்ப்பதற்கு 3000 ரூபாய் நன்கொடையாகவும் மாதம் 1500 ரூபாய் கட்டணம் வசூலிப்பதாக கூறப்படுகிறது இந்த நிலையில் இங்கு தங்கியுள்ள முதியவர்கள் எவரேனும் மாதம் 1500 ரூபாய் அவர்களை இங்கு சேர்த்து விட்டவர்கள் கட்டவில்லை என்றால் அவர்களை ஒருநாள் முழுவதும் பாத்திரம் விளக்குவது காப்பகத்தை சுத்தம் செய்வது போன்ற வேலைப்பாடுகளில் ஈடுபட வைப்பதால் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றதாகவும் குற்றச்சாட்டை எழுந்துள்ளது.


திருப்பரங்குன்றம் செய்தியாளர்
R.வினோத் பாபு

No comments:

Post a Comment

Post Top Ad