மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகேஅலங்காநல்லூர், கும்பாபிஷேகம்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே, 15.பி.மேட்டுப்பட்டி, வடக்கு தெரு பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ நல்லபிறவியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடந்த இந்த யாகசாலை பூஜையில், முதல் நாள் யாக கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், பூர்ணாஹூதி மங்கல இசை முழங்க கோபூஜை, தீபாதாரணையும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, இரண்டாம் நாள் காலை மங்கல இசை முழங்க மகா பூர்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது. பின்னர், ராமேஸ்வரம், அழகர்கோவில், உள்ளிட்ட திருத்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் மேளதாளங்கள் முழங்க, யாகசாலையை சுற்றி வலம் வந்து கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர், விழாவிற்கு வருகை தந்த பக்தர்களுக்கு பூஜை மலர்களும் அன்னதானமும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம், வடக்கு தெரு பங்காளிகள் செய்திருந்தனர்.
15.பி.மேட்டுப்பட்டி, வடக்கு தெரு பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ நல்லபிறவியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடந்த இந்த யாகசாலை பூஜையில் முதல் நாள் யாக கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், பூர்ணாஹூதி மங்கல இசை முழங்க கோபூஜை, தீபாதாரணையும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, இரண்டாம் நாள் காலை மங்கல இசை முழங்க மகா பூர்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது. பின்னர், ராமேஸ்வரம், அழகர்கோவில், உள்ளிட்ட திருத்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் மேளதாளங்கள் முழங்க யாகசாலையை சுற்றி வலம் வந்து கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர், விழாவிற்கு வருகை தந்த பக்தர்களுக்கு பூஜை மலர்களும் அன்னதானமும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம், வடக்கு தெரு பங்காளிகள் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment