ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மதுரை மாவட்டம்..... 2024..2025 ஆம் கல்வியாண்டில் பள்ளிகள் துவங்கும் முதல் நாள் 10.6.24 இன்று மதுரை மாவட்ட மேற்கு ஒன்றியம் அரசு உயர்நிலைப் பள்ளி ஊமச்சிகுளத்தில் பள்ளிக்கல்வித்துறையின் சிறப்புமிகு திட்டங்களில் ஒன்றான படிக்கும் பள்ளியிலேயே மாணவர்களின் ஆதார் எண் புதுப்பித்தல்.. திருத்தம் மேற்கொள்ளுதல்... மேலும் பயிலும் பள்ளியிலேயே அனைத்து மாணவ மாணவிகளுக்கும் வங்கி கணக்கு அஞ்சலகத்தில் துவக்குதல் போன்ற நிகழ்வுகள் சார்ந்து மதிப்புமிகு மதுரை மாவட்ட ஆட்சியர் மு. சௌ. சங்கீதா .. மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கா. கார்த்திகா கலந்து கொண்டு மாணவர்களுக்கான ஆதார் புதுப்பித்தல் மற்றும் திருத்தம் மேற்கொள்ளுதல் முகாமை திறந்து வைத்து புதுப்பிக்கும் பணியை பார்வையிட்டனர்....பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் வங்கி கணக்கு அஞ்சலகத்தில் துவங்கும் நிகழ்வையும் துவக்கி வைத்து.. பள்ளியில் நடைபெற்ற மாணவர்களின் சேர்க்கை கொண்டாட்ட நிகழ்வில் மாணவ.. மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி அனைத்து வகுப்புகளிலும் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும் வழங்கினார்கள். தமிழக அரசின் இலவச பாட நூல்களும் வழங்கப்பட்டது நிகழ்வில் அஞ்சலகத் துறை தென் மண்டல மேலாளர் கிருஷ்ணகுமார்.. கிளை மேலாளர் ஸ்ரீ லட்சுமி பிரீத்தி.. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி மாவட்ட திட்ட அலுவலர் திரு சரவண முருகன்.. பள்ளியின் கல்வியாளர்கள்.. பள்ளி மேலாண்மை குழு தலைவர்.. பெற்றோர்கள்.. அஞ்சலக துறையின் மண்டல மேலாளர் கிருஷ்ணகுமார்.... கிளை மேலாளர் லட்சுமி பிரீத்தி பள்ளியின் தலைமை ஆசிரியர் உதவி ஆசிரியர்கள் இந்த பள்ளிக்கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மேற்கு ஒன்றிய வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.
No comments:
Post a Comment