சாலையில் குறுக்கே விழுந்த மரம் நல்வாய்ப்பாக யாருக்கும் எவ்வித காயம் இன்றி தப்பினர் - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Sunday, 16 June 2024

சாலையில் குறுக்கே விழுந்த மரம் நல்வாய்ப்பாக யாருக்கும் எவ்வித காயம் இன்றி தப்பினர்


சாலையில் குறுக்கே விழுந்த மரம் நல்வாய்ப்பாக யாருக்கும் எவ்வித காயம் இன்றி தப்பினர்



மதுரை ஜெயந்திபுரம் சுப்பிரமணியபுரம் பிரதான சாலையில் இன்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது அப்பொழுது ஜெயந்திபுரம் சுப்பிரமணியபுரம் சாலையில் உள்ள மதுரை கல்லூரி எதிரே உள்ள சாலையில் மிகப்பெரிய மரம் ஒன்று சாலையில் குறுக்கே விழுந்து ஒரு வீட்டின் மேலே விழுந்தது இதனால் உயர் மின் அழுத்த கம்பியின் மீது மரம் விழுந்ததால் மின் இணைப்பு உடனடியாக துண்டிக்கப்பட்டது மேலும் மரம் விழுந்த அருகே தள்ளு வண்டியில் சோமாஸ் உள்ளிட்ட வடைகள் விற்கும் கடை ஒன்று உள்ளது இன்று விடுமுறை என்பதால் அந்த கடை திறக்கப்படவில்லை ஆட்கள் யாரும் இருந்திருந்தால் மிகப்பெரிய அளவில் உயிர் சேதமோ அல்லது காயமோ ஏற்பட்டிருக்கும் அந்த நேரத்தில் வாகனம் ஏதும் அந்த பகுதியில் வரவில்லை துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு துறையினர் மற்றும் ஜெயந்திபுரம் காவல்துறையினர் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக போராடி மரத்தை அகற்றினர் மேலும் மின்வாரிய ஊழியர்கள் அறுந்து போன மின் வயிறுகளை புது வயர்களாக மாற்ற மின் இணைப்பை துண்டித்து புதிய வயர்கள் மாற்றுவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் சம்பவ இடத்திற்கு மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் நேரில் பார்வையிட்டு பணிகளை மேலும் தூரிதப்படுத்தினார் மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதியில் மிகப் பெரிய ராட்சத மரம் சாலையில் குறுக்கே விழுந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment

Post Top Ad