கல்லூரி மாணவிக்கு கல்வி கட்டணம் செலுத்திய சமூக ஆர்வலர்:
மதுரை நகரில் கல்லூரி மாணவிக்கு, கல்வி கட்டண செலுத்திய சமூக ஆர்வலர் அண்ணா நகர் முத்துராமன். இவர் மக்கள் நீதி மக்கள் நீதி மையம் நிர்வாகி ஆவார். இவர், பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், கல்லூரி மாணவிகளுக்கு கல்வி கட்டணம் செலுத்துதல், மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணம் வழங்குதல் போன்ற பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார் .
இது மட்டுமில்லாமல், விழா காலங்களில் மதுரை அண்ணா நகர் பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைத்தல், அன்னதான வழங்குதல் போன்ற பணிகளையும் தொடர்ந்து செய்து வருகிறார். எந்தவித பலனையும் எதிர்பார்க்காமல், மக்கள் சேவையில் தன்னை முழுமையாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். இவர் மதுரை பொன்மேனி பகுதியைச் சேர்ந்த மாணவி திவ்யாவுக்கு, கல்வி கட்டணம் செலுத்தியுள்ளார். இவரை, அண்ணா நகர் முத்துராமன் என, மக்கள் அன்போடு அழைப்பர்.
No comments:
Post a Comment