உசிலம்பட்டியில் ரூ 12 லட்சம் மத்திப்பீட்டில் மூன்று எறியூட்டும் கொட்டகை கட்டுவதற்கு எம்எல்ஏ அய்யப்பன் பூமிபூஜை:
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகராட்சிட்குட்பட்டது, கவண்டன்பட்டி கிராமம். இந்த கிராமத்தில், சுமார் ஆயிரத்த்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், இக்கிராமத்தில் இறந்தவர்களின் சடலத்தை எரியூட்டுவதற்கு எறியூட்டும் கொட்டகை வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ,சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் மூன்று சமுதாய மக்களுக்கு தனித்தனியாக மயானம் கட்ட தலா ரூ.4 லட்சம் வீதம் 12 லட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது.
இதற்கான பணிகளை, உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன் பங்கேற்று, பூமிபூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார்.
இதில் ,நகராட்சி பொதுப்பணி மேற்பார்வையாளர் பாலமுருகன், அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் மாவட்ட ஓட்டுநர் அணி செயலாளர் பிரபு, நகர செயலாளர் சசிக்குமார், ஒன்றிய செயலாளர்கள் ஜான்சன், கோஸ்மீன், பன்னியான் காசிநாதன், ஆவின் சவுந்திரபாண்டி உள்ளிட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment