குறும்பட இயக்குனருக்கு பிறந்தநாள் விழா: - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday 7 June 2024

குறும்பட இயக்குனருக்கு பிறந்தநாள் விழா:

 


குறும்பட இயக்குனருக்கு பிறந்தநாள் விழா:  



ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் பிறந்தநாள் விழா மிக மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. செய்யது ஆரீப் தலைமையிலும், மேக்கப் ஆர்டிஸ்ட் & நடிகை ப்ரியா, மீனா, ஆசிரியை கிருபா ஆகியோர் முன்னிலையிலும், ரேஷ்மா (எ) ரேணுகாதேவி மெழுகுவர்த்தி ஏற்ற விழா நாயகன் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் கேக் வெட்டிக் கொண்டாடினார். வழக்கறிஞர் லதா, ஈஷா ஹேர் நிறுவனர் ஜோதி, எஸ்.டி.சுப்பிரமணியன், நடிகர் மீசை மனோகரன், அப்பா பாலாஜி, விஜய் டிவி பாலா, ஆசிரியரும், நடிகருமான மோகன் தென்னரசு, தவழும் மாற்றுத் திறனாளி தலைவி எம்.ராவியத் பேகம், ஐயப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். விழாவில், குமரேசன், வைஷ்ணவி, மல்லிகா, காஞ்சனா, மகாலெட்சுமி, மாற்றுத்திறனாளி தனலட்சுமி, நடிகர்கள், நடிகைகள் கலந்து கொண்டனர். ஒளிப்பதிவாளரும், நடிகருமான பிரேம்ஜி, கருங்காலக்குடி சந்துரு, தலைவர் மீனா, பிரியா இணைந்து விழா ஏற்பாடுகளை செய்தார்கள். அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad