சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் யோகா பயிற்சி வகுப்புகள் நடைப்பெற்றது.
சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 அன்று கடைபிடித்து வருகின்றனர். இதில் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்து சாத்தங்குடி கிராமத்தில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் சித்த மருத்துவர் அமுதா அவர்கள் தலைமையில் யோகா பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. இதில் செவிலியர்கள் மாணவ மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு ஒவ்வொரு யோகாசனத்தை செய்தனர். இதில் மூச்சு பயிற்சி, புஜங்காசனம் சூரிய நமஸ்காரம், வஜ்ராசனம் ஆகிய யோகாசனத்தை செய்து காட்டினார். இதை மாணவர்கள் ஆர்வத்துடன் செய்தனர்.மேலும் தினமும் காலையில் யோகா பயிற்சி மேற்கொண்டால் நமது ஆரோக்கியமாக இருக்கும்.நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவு வகைகள் காய்கறிகள் அதை சரியாக உட்கொள்ளும் போது உடலுக்கு எந்த ஒரு பாதிப்பு வராது என்று கூறினார். இந்நிகழ்ச்சியில் கிராம பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
திருமங்கலம் செய்தியாளர்
R. வினோத் பாபு
No comments:
Post a Comment