மதுரையில் விஜயின் 50-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த தவெக கட்சியினர்.
விஜயின் 50வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில் தமிழகத்தில் கள்ளச்சாராயம் உயிர் பலி ஏற்பட்டதைத் தொடர்ந்து தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட வேண்டாம் என விஜய் அறிவுறுத்தி இருந்தார். இருந்தாலும் விஜய் ரசிகர்கள் தமிழக வெற்றி கழகத்தினர் உள்ளிட்ட பலரும் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் ஆகியவற்றை செய்து வருகின்றனர்.
அந்த வகையில் மதுரை மாவட்ட தொழிற்சங்க தலைவர் சதீஷ் என்பவர் மதுரை அவனியாபுரம் பகுதியில் இயங்கி வரக்கூடிய பராமரிப்புமின்றி, சாலையில் விபத்தினால் காயம் ஏற்பட்டு பராமரிக்க முடியாமல் விட்டு சென்ற வளர்ப்பு நாய்கள் மற்றும் சாலையோர நாய்களை அவனியாபுரம் அருகே ஈச்சனேரி பகுதியில் தனிநபர் ஒருவர் நாய்களுக்கு சிகிச்சை அளித்து பராமரித்து வருகிறார்.
இந்த நிலையில் சதீஷ் அவ்விடத்திற்கு சென்று விஜயின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு வாயில்லா ஜீவன்களுக்கு அசைவ உணவளித்தார். இதுகுறித்து அவர் கூறும்போது,
கொரோனா காலகட்டத்தில் அனைத்து தரப்பினருக்கும் அரசு சார்பில் அல்லது தனியார் அமைப்புகள் மூலம் உணவளிக்கப்பட்டது. ஆனால் இப்போது கொரோனா காலத்திற்குப் பிறகு வாயில்லா ஜீவன்களுக்கு உணவளிக்க ஆளில்லாமல் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. ஆதலால் அவற்றை பராமரித்து வரும் இவ்விடத்திற்கு சென்று அசைவ உணவளித்ததாக கூறினார். நாய்களுக்கு உணவளித்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
No comments:
Post a Comment