மதுரை விமான நிலையத்தில் மீண்டும் சர்ச்சை - அதிமுகவினருக்கும் போக்குவரத்து காவல்துறைக்கும் இடையே வாக்குவாதம்.
மதுரை விமான நிலையத்திலிருந்து, அதிமுக எடப்பாடி பழனிச்சாமி சென்று கொண்டிருந்த நிலையில், சில தொண்டர்கள் செல்லும் நுழைவு வாயில் அருகே வழியில் நின்று வரவேற்பு அளித்தனர் .அப்போது அங்கு போக்குவரத்து போலீஸாரால் வைக்கப்பட்டுள்ள பேரிக்காடுகளை, அதிமுக வினர் அகற்றிவிட்டு நின்றதால், போக்குவரத்து காவல்துறைக்கும் அதிமுகவினுடைய வாக்குவாதம் ஏற்பட்டது.ஏற்கனவே, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு காரை நிறுத்துமிடத்தில் அதிமுகவினருக்கும், விமான நிலைய அதிகாரிகள், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், எடப்பாடி பழனிச்சாமி சென்ற பிறகு போக்குவரத்து காவல்துறையினருக்கும், அதிமுகவினுடைய வாக்குவாதம் ஏற்பட்டது.
மதுரை விமான நிலையத்தில் சிறிது நேரம் சலசலப்பை ஏற்படுத்தியது.காவல் துறையினருடன் இணக்கமாக செல்லும்காவல் துறையினர் தற்போது மோதல் ஏற்படும் விதமாத தொடர்ந்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டு , போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர்.
No comments:
Post a Comment