நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்ய வலுவிறுத்தி வருகிற 22 ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகையிட உள்ளோம்- காங்கிரஸ் மாணவர் அமைப்பு - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday, 14 June 2024

நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்ய வலுவிறுத்தி வருகிற 22 ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகையிட உள்ளோம்- காங்கிரஸ் மாணவர் அமைப்பு


நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்ய வலுவிறுத்தி வருகிற 22 ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகையிட உள்ளோம்- காங்கிரஸ் மாணவர் அமைப்பு


நீட் தேர்வுகளில் குளறுபடி தொடர்வதை ஒட்டி இந்தியா முழுவதும் நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்ய வலியுறுத்தி  இந்திய தேசிய காங்கிரஸ் மாணவர் அமைப்பு சார்பாக திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் காங்கிரஸ் மாணவர் அமைப்பு மாநில தலைவர் சின்னத்தம்பி தலைமையில் மாவட்டத் தலைவர் சுரேஷ் ஏற்பாட்டில் மாணவர்கள் தேசிய தேர்வு முகமையை கண்டிக்கின்றோம் என்றும்  மாணவரின் வாழ்க்கையில் விளையாடாதே நீட் தேர்வை ரத்து செய்யவும் ஊழல் வேண்டாம் நீட் தேர்வில் ஊழ வேண்டாம் என்று கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி வருகிற 22ஆம் தேதி அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் மாணவர் அமைப்பினர் மற்றும் அகில இந்திய மாணவர்கள் பெருமன்றம் சார்பாகவும் திமுக மாணவர் அணி செயலாளர் அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி இந்தியா கூட்டணி மாணவர் கூட்டமைப்பு அமைப்போடு சேர்ந்து தமிழக ஆளுநர் மாளிகையை முற்றுகையிட ஒருங்கிணைப்பு செய்துள்ளோம் என்று தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad