டேக்கத்தலான் ஸ்போர்ட்ஸ் ஸ்டோர் லீ சாம்பியன் இந்தியன் சிலம்பம் பள்ளி இணைந்து நடத்தும் Inter Silambam Tournament சிலம்பம் போட்டி - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Saturday 25 May 2024

டேக்கத்தலான் ஸ்போர்ட்ஸ் ஸ்டோர் லீ சாம்பியன் இந்தியன் சிலம்பம் பள்ளி இணைந்து நடத்தும் Inter Silambam Tournament சிலம்பம் போட்டி

 


டேக்கத்தலான் ஸ்போர்ட்ஸ் ஸ்டோர் லீ சாம்பியன் இந்தியன் சிலம்பம் பள்ளி இணைந்து நடத்தும் Inter Silambam Tournament சிலம்பம் போட்டி இன்று திருமங்கலத்தில் பால குரு திருமண மஹாலில் நடந்தது. இதில் 6வயதுமுல் 18 வயது நிரம்பிய மாணவ, மாணவியர்களுக்கு சிலம்ப போட்டியை கலை நண்பனே மாமல்லன் எஸ் எம் மணி தலமை பயிற்சியாளர் துவக்கி வைத்தார் முன்னிலை வகித்தவர் செல்வி எஸ். சங்கீத லட்சுமி, திருமங்கலம் மதுரை, விருதுநகர், ஆகிய மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்டனர். 

இந்த சிலம்ப போட்டிகளில் ஒற்றை கம்பு மற்றும் விடாமல் ஒரு மணி நேரம் கம்புகளை சுற்றிய மாணவர்களுக்கு சிறப்பு பரிசு  மதுரை மாவட்ட சிலம்ப பயிற்சியாளர் எஸ். கணேசன் வழங்கினார். இதில் நடுவர்களாக சந்திரா, எஸ். அஜிதா, எஸ். ஜெப கிருபா, நன்றியுரை விக்னேஸ்வரன் இந்த போட்டிகள் அனைத்து ஏற்பாடுகளை சிலம்ப தலைமை பயிற்சியாளர் பால் பாண்டி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

No comments:

Post a Comment

Post Top Ad