வாடிப்பட்டி அருகே, பாண்டியராஜபுரம் சர்க்கரை ஆலை மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Sunday 26 May 2024

வாடிப்பட்டி அருகே, பாண்டியராஜபுரம் சர்க்கரை ஆலை மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு


வாடிப்பட்டி அருகே, பாண்டியராஜபுரம் சர்க்கரை ஆலை மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள்  சந்திப்பு.


மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே, பாண்டியராஜபுரம் சர்க்கரைஆலை அரசு மேல்நிலைப் பள்ளியில், கடந்த 91 மற்றும் 92 ஆம் ஆண்டு படித்த மாணவர்கள் இன்று தமிழகத்தின் பல்வேறு பொறுப்புகளில் உள்ளனர். இவர்கள் அனைவரும் கடந்தநான்கு ஆண்டுகளுக்கு முன்பு வாட்சப் குழு மூலம் இணைந்து வருடம் தோறும் ஓரிடத்தில் கூடி தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு  செய்து அதன்படி நடத்தி வந்தனர் .


இந்த ஆண்டு அதே போல் மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள தனியார் ஓட்டலில் நேற்று அனைவரும் தங்கள் குடும்பத்துடன் வருகை தந்து மலரும் நினைவுகளில் தாங்கள் படித்த காலங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை கூறிம கிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர் . தங்கள் குழந்தைகளையும் அழைத்து வந்து பாட்டு நடனம் விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகமாக பொழுதை கழித்தனர் .


இதுகுறித்து,  பேட்டியில் அவர்கள் கூறும்போது .


கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் பள்ளியில் படித்த அனைவரும் வாட்ஸ் அப்  குழு மூலம் இணைந்து முதலில் மாணவர்கள் மற்றும் மாணவிகள் மட்டும் ஓரிடத்தில் கூடி

எங்களின் மலரும் நினைவுகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பணிகள் பற்றி பகிர்ந்து கொண்டோம். அப்போது, அடுத்த வரும் காலங்களில் குடும்பத்துடன் கலந்து கொள்வது என முடிவு செய்தோம். அதனைத் தொடர்ந்து, இன்று மதுரையில் அனைவரும் ஒன்று கூடி தங்கள் குழந்தைகளுடன் ஆடல் பாடல் விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகமாக கொண்

டாடினோம். 

கூட்டு குடும்பங்கள் சிதைந்துவரும் இந்த காலத்தில் இதுபோன்று நமது கலாச்சாரத்தை பாதுகாக்கும் வகையில் மற்ற பள்ளிகளில் படித்த மாணவர்களும் இது போன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து தாங்கள் படித்த பள்ளிக்கு பொருளாதார ரீதியில் உதவி செய்ய வேண்டும் ஏழை மாணவர்களுக்கு மற்றும் கல்வியில் பின்தங்கிய பகுதிகளுக்கு உதவி செய்ய வேண்டும் என, கூறினார். நிகழ்ச்சி முடிவில் அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டதுடன் அனைவருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கி நெகிழ்ச்சியுடன் அடுத்த வருடம் சந்திப்போம் என தங்களின் ஊருக்கு சென்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad