அதிமுக சார்பில், அன்னதானம்: - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Saturday, 25 May 2024

அதிமுக சார்பில், அன்னதானம்:


 அதிமுக சார்பில், அன்னதானம்:


மதுரை மாவட்டம், சோழவந்தானில் அதிமுக சார்பில், நீர்  மோருடன் அன்னதானம் வழங்கப்பட்டது.


தமிழக முன்னாள் முதல்வரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க, மதுரை புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் ஆலோசனையின் பேரில், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு சோழவந்தான் பேரூராட்சி அதிமுககவுன்சிலர் ரேகா ராமச்சந்திரன் ஏற்பாட்டில், நீர் மோருடன் அன்னதானமும் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கு, வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார் . பேரூர் செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி அதிமுக கவுன்சிலர் ரேகா ராமச்சந்திரன், கலந்துகொண்டு பொது


மக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இதில், நிர்வாகிகள் இளைஞரணி மாவட்ட இணைச் செயலாளர் கேபிள் மணி ஏழாவது வார்டு செயலாளர்எஸ்பி மணி பிஆர்சி நாகராஜ் பேரூர் துணைச் செயலாளர் தியாகு வெடிகுண்டு ராசு வேல்முருகன் விக்னேஷ் கார்த்திக் சுப்பிரமணி சங்கரலிங்கம்மற்றும் அதிமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad