மக்கள் பணியாக அதிமுக போராட்டம் நடத்த அதிமுக தயங்காது:
தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை எனவும், இதெல்லாம் பார்க்கும் போது அரசியல் கால்புணர்ச்சியோடு நடைபெறுகிறதோ என்ற அச்சம் ஏற்படுகிறது மக்கள் பணிகளை முன்னெடுத்து செல்ல போராட்ட களத்திற்கு செல்வதற்கும் தயங்க மாட்டோம் என ,முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை மாவட்டம், பேரையூரில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு, மருத்துவ முகாம் மற்றும் அன்னதான விழாவை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் துவக்கி வைத்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். முன்னதாக, பொதுமக்கள் மத்தியில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.
உதயக்குமார்:பேரையூர் தாலுகா, உருவானது முதல் இந்த தாலுகா வளர்ச்சி அடைவதற்கு அதிக நிதியை ஒதுக்கியது அதிமுக அரசு.
எங்கள் கடமையை சரியாக ஆற்றுவதற்கு அன்று கேட்ட நிதியை எல்லாம் அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார். சாலை மேம்பாடு, குடிநீர் வடிகால் வாரியம், சாலை விரிவு படுத்துதல், புறவழிச்சாலை அமைக்க மக்களின் தேவை கருதி புறவழிச் சாலை அமைத்து கொடுத்தது அதிமுக அரசு.
ஆனால், இன்று குடிநீர் கட்டணம், மின்சார கட்டணம் கூட செலுத்த முடியாத அளவுக்கு போதிய நிதியை ஒதுக்காமல், இந்த அரசு மெத்தனமாக இருப்பது வேதனை அளிக்கிறது. மக்கள் பணியை எப்படி செய்வது,தேவையான நிதியை ஒதுக்கினால் தான், வளர்ச்சி திட்டங்களை முன்னெடுக்க முடியும்.
கொரோனா காலத்தில் காவல்த்துறையினருடன் அதிமுக நிர்வாகிகளும் இணைந்து எங்கள் உயிர் போனாலும், பாதுகாப்பு அரணாக இருப்போம் என முன்னின்று கொரோனா தடுப்பு பணிகளை அதிமுக தொண்டர்கள் செய்தனர். ஆனால், இன்று உங்களுக்கு வளர்ச்சி திட்டங்களை செய்ய பல்வேறு தடைகள் ஏற்படுகிறது.
தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களையும் செயல்படுத்துவது இல்லை, இதெல்லாம் அரசியல் கால்புணர்ச்சியோடு நடைபெறுகிறதோ என்ற அச்சம் ஏற்படுகிறது.
மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என, மக்கள் வளர்ச்சி பணிகளை முன்னெடுத்து செல்வதற்கு நாங்கள் போராட்ட களத்திற்கு செல்லவும் தயங்க மாட்டோம் என ,பேசினார்.
No comments:
Post a Comment