மதுரை ஆவின் பால விநாயகர் ஆலயத்தில், குரு பெயர்ச்சி விழா: - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Thursday, 2 May 2024

மதுரை ஆவின் பால விநாயகர் ஆலயத்தில், குரு பெயர்ச்சி விழா:

 


மதுரை ஆவின் பால விநாயகர் ஆலயத்தில், குரு பெயர்ச்சி விழா:


 மதுரை ஆவின் பால விநாயகர் ஆலயத்தில், குரு பெயர்ச்சி விழா நடைபெற்றது. மதுரை சாத்தமாங்கலத்தில் உள்ள ஆவின் பால விநாயகர் ஆலயத்தில், குரு பெயர்ச்சி முன்னிட்டு சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. ஈஸ்வர பட்டர் தலைமையில், வேதியர்கள் சிறப்பாக செய்தனர் .


இதை அடுத்து, இக்கோயில் அமைந்துள்ள குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகங்களும், அதைத்தொடர்ந்து, பரிகார அர்ச்சனை நடைபெற்றது. இதை அடுத்து, கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad