மதுரையில் நடிகர் அஜித் குமாரின் பிறந்த நாள் விழா !
மதுரை யானைமலை ஒத்தக்கடை அருகே உள்ள சுதந்திர நகர் 3 வது தெருவில், மே உழைப்பாளர் தினம் மற்றும் நடிகர் அஜித் குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு ஆர்விஎம் மெட்டல் ஏ.கே. நண்பர்கள் சார்பில் 3 ம் ஆண்டு அன்னதானம் விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில், ஊராட்சி மன்றத் தலைவர் முருகேஸ்வரி சரவணன் தலைமை தாங்கினார். மேலும், மே.1 ம் தேதி நடிகர் அஜித் குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி மகிழ்ச்சி பெற்றனர். இதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு சிக்கன் பிரியாணி 500 க்கும் மேற்ப்பட்டவர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது. ஆர்.வி.எம். மெட்டல் ஏ.கே. நண்பர்கள் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொதுமக்கள் பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment