மதுரை அருகே, செயல்படாத கல்குவாரி பள்ளங்களில் ஆபத்தை உணராமல் குளிக்கும் பொதுமக்கள்; நிரந்தரமாக மூடிட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Monday 27 May 2024

மதுரை அருகே, செயல்படாத கல்குவாரி பள்ளங்களில் ஆபத்தை உணராமல் குளிக்கும் பொதுமக்கள்; நிரந்தரமாக மூடிட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

 


மதுரை அருகே, செயல்படாத கல்குவாரி பள்ளங்களில் ஆபத்தை உணராமல் குளிக்கும் பொதுமக்கள்; நிரந்தரமாக மூடிட  சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.


மதுரை யானைமலை ஒத்தக்கடை அருகே, உள்ள நரசிங்கம் பகுதிகளில் செயல்படாத கல்குவாரிகளில் பள்ளங்கள் இருந்து வருகின்றன. இங்கு ஆபத்தை உணராமல், சிறுவர்கள்

 

மீன் பிடித்து, குளித்து விட்டு செல்கின்றனர். கடந்தாண்டு திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் இந்த கல்குவாரி பள்ளத்தில் குளித்த போது நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதேபோல், உயிர் பலிகள் நேரிடும் நிலையில் தற்போது அந்த பள்ளங்களில் ஆகாயத் தாமரை செடிகள் படர்ந்து காணப்பட்டு வருகின்றது. பாதுகாப்பற்ற முறையில் இரு சக்கர வாகனங்கத்தில் சென்ற வண்ணம் உள்ளனர்.


அஜாக்ரதையாக பொதுமக்கள் அங்கு குளிக்கும் போது ராட்சத ஆழம் அறியாமல் எதிர்பாராத விதமாக உயிரிழப்புகள் நேரிடுகின்றது. எனவே, இதுபோன்ற உயிரிழப்புகளை தடுக்க கல்குவாரி பள்ளங்களை சுற்றி தடுப்பு வேலிகள் அமைத்திடவும் அல்லது நிரந்தரமாக மூடிட வேண்டும். என, அப்பகுதி சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மதுரை மாவட்ட நிர்வாகம் துரித எடுக்கவும் கோரப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad