மதுரை பாலமேடு அருகே, கல்குவாரியில் உள்ள நீரில் மூழ்கி வாலிபர் உயிரிழப்பு:
மதுரை மாவட்டம், பாலமேடு அருகே ராஜக்கால்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (23).கூலி தொழிலாளி. இவரை காணவில்லை என, குடும்பத்தார் தேடிய நிலையில், அப்பகுதியில் உள்ள கல்குவாரியில் குளம் போல் தேங்கியிருந்த நீரில் மிதந்ந நிலையில் இறந்து கிடந்தார். தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று சந்திரசேகரின் சடலத்தை மீட்டு உடற் கூறாய்வுக்காக வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சந்திரசேகர் கல்குவாரி பள்ளத்திற்கு எதற்காக வந்தார் என்றும், இறப்புக்கான காரணம் குறித்து அவரது குடும்பத்தினர் மற்றும் அப் பகுதியை சேர்ந்தவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.
மேலும், இவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது விபத்து மரணமா? என்பது குறித்து அவர் குடும்பத்தார் கொடுத்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்து, பாலமேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment