அரிய வகை பசுக்களை பராமரிக்கும் "தனி ஒருவள் " அவனி சங்கீதா. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday 24 May 2024

அரிய வகை பசுக்களை பராமரிக்கும் "தனி ஒருவள் " அவனி சங்கீதா.

 


அரிய வகை பசுக்களை பராமரிக்கும் "தனி ஒருவள் " அவனி சங்கீதா.


மதுரை அவனியாபுரத்தில் மிகவும் அரிய வகை கேரள வெச்சூர் குட்டையின மாடு கன்று ஈன்றுள்ளது.*
உலக கின்னஸ் சாதனை சான்றிதழ்படி 150 மாடுகள் மட்டுமே உள்ள நிலையில் தற்போது புதிய கன்று வரவு.


மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம்  அருகே அவனியாபுரம் திருப்பதி நகரை சேர்ந்தவர் நாகசுப்பிரமணியன். இவரது மனைவி சங்கீதா. சங்கீதா அவனியாபுரம் பகுதியில் அக்சயா கோசாலை என்ற பெயரில் கோசாலை நடத்தி வருகிறார்.


அதில் அரிய வகை மாடுகளான கேரளாவை சேர்ந்த குட்டையின வெச்சூர் வகை மாடுகள் 5 வைத்துள்ளார். அவற்றில் தற்போது குட்டை இன மாடு ஒன்று கன்று ஈன்றுள்ளது. (2:1/2 அடி)  இரண்டரை  அடி உயரமுள்ள தாய் பசுவின் குட்டி சுமார் ஒரு அடிக்கும் குறைவாகவே உள்ளது. தினமும் ஒன்றரை லிட்டர் முதல் இரண்டு லிட்டர் அளவே பால் கொடுக்கும். இதன் விலை 100 ரூபாய் என விற்கப்படுகிறது. மருத்துவ குணம் நிறைந்த இப்பால் தாய்ப்பாலுக்கு இணையாக கருதப்படுகிறது.


மேலும் காங்கேயம் நாட்டு இன மாடுகள், காரைக்குடி குட்டை மாடுகள் போன்ற கால்நடைகளை தனது கோசாலையில் பராமரித்து வருகிறார். தனது கோசாலையில் சங்கீதா நுழைந்தது மே அனைத்து பசுக்களும் அம்மா என்று அழைத்து நெகிழ வைக்கின்றன. தனது குழந்தைகளை போல் ஒவ்வொரு கால்நடைக்கும் கோதாவரி, கங்கா, பரமேஸ்வரி, பார்வதி, யமுனா என பெயரிட்டு அதனை வாஞ்சயுடன்  தடவி பேசுவது நெகிழ்சியை ஏற்படுத்துகிறது. ஆண்களே கால்நடைகளை பராரிக்க தயங்கி பசுக்களை விற்பனை செய்யும் காலத்தில் தனி யொருவராக வேலை ஆளுடன் கோசாலையை சங்கீதா பராமரித்து வருகிறார். புதிய வரவான அரிய வகை கன்றுக்குட்டியை அருகிலுள்ள பலர் ஆர்வமுடன் வருகின்றனர்.

இது குறித்து சங்கீதா கூறும்போது

அக்க்ஷயா கோசாலை என்ற பெயரில் கடந்த 2018 முதல்  கோசாலை நடத்தி வருகிறேன். எனது கோசாலையில் கேரளாவின் குட்டை இன வகையைச் சேர்ந்த வெச்சூர் வகை மாடுகள் 5 உள்ளது .


கின்னஸ் புத்தக சான்றிதழின்படி இந்தியாவில் இதுவரை 150 குட்டையின வெச்சூர் மாடுகள் மட்டுமே உள்ளன என்னிடம் ஐந்து மாடுகள் பராமரிப்பில் இருந்து வருகிறது. தற்போது வெச்சூர் வகை  மாடு ஒன்று கன்று ஈன்றுள்ளது . இரண்டரை அடி உயரமுள்ள இந்த மாடு புதிய குட்டியை ஈன்றது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் காரைக்குடியை சேர்ந்த குட்டை இன மாடுகள், காங்கேயம் மாடுகள் போன்ற பாரம்பரியமிக்க மாடுகளை வளர்த்து வருகிறேன். அரிய வகை வெச்சூர் வகை கன்றை பார்ப்பதற்கு இப்போது மக்கள் ஆர்வமுடன் வருகின்றனர். தங்களால் இயன்ற தீவனங்களை வாங்கி தருகின்றனர்.



வெச்சூர் வகை மாடுகள் பால் மிகவும் குறைவாகவே தரும். ஒரு நாளைக்கு ஒன்றரை லிட்டர் முதல் இரண்டு லிட்டர் வரை மட்டுமே பால் கொடுக்கும் தாய்ப்பாலுக்கு இணையான மருத்துவ குணம் நிறைந்த இப்பால் விலை 100 ரூபாய் லிட்டர் என்ற அளவில் விற்பனை செய்கிறேன் இப்போது கால்நடைகளை பராமரிப்பது சிரமமாக சூழ்நிலையாக இருந்தாலும் மகிழ்ச்சியுடன் மேற்கொண்டு வருகிறேன். வருமானம் என்பது நோக்கமல்ல. செலவுகளை பார்க்காமல் கால்நடைகள் அழிவிலிருந்து பாதுகாப்பது எனது நோக்கம் என கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad