திருமங்கலம் கோட்டத்திற்கு ஆறு புதிய பேருந்துகள். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Wednesday 22 May 2024

திருமங்கலம் கோட்டத்திற்கு ஆறு புதிய பேருந்துகள்.

 


திருமங்கலம் கோட்டத்திற்கு ஆறு புதிய பேருந்துகள்.



திருமங்கலம் அரசு போக்குவரத்து பணிமனைக்கு 6 புதிய பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளன இதனால் ஓட்டை உடைசல் பஸ்களுக்கு பதிலாக புதிய பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளது. குறித்து பொதுமக்களிடம் வரவேற்பைப் பெற்றன. திருமங்கலம் அரசு போக்குவரத்து பணிமனையில் 98 பேருந்துகள் உள்ளன இதில் மதுரை நகரின் பல்வேறு பகுதிகளை போய் சேரும் குறிப்பாக காரியாபட்டி, சோழவந்தான், உசிலம்பட்டி, சேடப்பட்டி, மருதங்குடி தங்களாச்சேரி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுடன் டவுன் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன இது தவிர சிவகாசி, ராஜபாளையம், கம்பம், கோயம்புத்தூர் ,சேலம், செங்கோட்டை, ஈரோடு, உள்ளிட்ட பகுதிகளுக்கு வெளியூர் பேருந்துகளும் இயக்கப்பட்டு வந்தன இந்நிலையில் தமிழக அரசு தற்போது அனைத்து பணிகளையும் புதிய பேருந்துகள் வாங்க உத்தரவு விட்டு பல்வேறு டிப்போக்கர்களுக்கு புதிய பேருந்துகள் வந்துள்ளன இதே போல் திருமங்கலம் டிப்போவிற்கு 6 புதிய பேருந்துகள் வந்துள்ளன. இவற்றில் நான்கு டவுன் பஸ்கள் ஆகும் இவை திருமங்கலத்தில் பார்க் டவுன், ஆரப்பாளையம், அண்ணா நகர், எம்ஜிஆர் நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது இது தவிர சிவகாசி, சேலம், ராஜபாளையம், ஆகிய வழித்தடத்தில் புதிய வெளியூர் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. நீண்ட நாட்களுக்கு பின்பு ஓட்டை உடைசல் பேருந்துகளுக்கு பதிலாக புதிய பேருந்துகள் வந்துள்ளது பொதுமக்களிடம் மிகுந்த மகிழ்ச்சியையும் வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து பொதுமக்கள் கூறுகையில் திருமங்கலம் புதிய மதுரை நகருக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது இது மகிழ்ச்சி அளிக்கிறது. அதே நேரத்தில் கிராமப்புறங்களுக்கும் இயக்கப்படும் டவுன் பசுக்களை மாற்றி விட்டு புதிய டவுன் பஸ் களை இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் முன் வர வேண்டும் என்று கூறினர்.

No comments:

Post a Comment

Post Top Ad