திருமங்கலம் அருகே அருள்மிகு ஸ்ரீ மகா கணபதி ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Wednesday, 22 May 2024

திருமங்கலம் அருகே அருள்மிகு ஸ்ரீ மகா கணபதி ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.


 திருமங்கலம் அருகே அருள்மிகு ஸ்ரீ மகா கணபதி ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.



மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமமான காமாட்சிபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மகா கணபதி ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை காலை கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை ,லட்சுமி ஹோமம் தீபாரனைகளுடன் ஆரம்பிக்கப்பட்டு இன்று
இன்று காலை 6.10 மணி முதல் 7.25 மணிக்குள் கோயில் கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்தினர் இதில் திருமங்கலம் கள்ளிக்குடி கல்லுப்பட்டி பேரையூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர் கும்பாபிஷேக ஏற்பாடுகள் அனைத்தும் காமாட்சிபுரம் கிராம பொதுமக்கள் மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை வணங்கி அருள் பிரசாதம் வாங்கி சென்றனர் விழாவின் முடிவில் அனைவருக்கும் சிறப்பான அன்னதானம் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad