மதுரை பெத்தனியாபுரத்தில் தகாத உறவால் பிறந்த பெண் குழந்தையை கழிவு நீர் கால்வாயில் வீசி சென்ற தாயை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை பெத்தனியாபுரம் பகுதியில் உள்ள ஃபாஸ்டின் நகர் சர்ச் அருகே கடந்த புதன்கிழமை காலை கழிவு நீர் கால்வாயில் பெண் குழந்தை ஒன்று இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கரிமேடு காவல்துறையினர் குழந்தையை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் குழந்தையை வீசி சென்றது யார் என்று அக்கம் பக்கத்தினரிடம் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்ட நிலையில் அதே பகுதியில் உள்ள அகத்தியர் 2 வது தெருவில் வசித்து வரும் ரேவதி என்பது தெரிய வந்தது.
பின்னர் ரேவதியை விசாரணை மேற்கொண்டதில் திருமணமாகி கணவனை பிரிந்து தனது தாய் மற்றும் 10 வயது மகனுடன் வாழ்ந்து வருவதும் தெருவோரங்களில் உள்ள பாட்டில்களை சேகரிக்கும் தொழில் ஈடுபட்டு வரும் நிலையில் பலருடன் தகாத உறவு ஈடுபட்டது தெரியவந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக கர்ப்பமாகி உறவினர்களுக்கு தெரியாமல் இருந்து வந்துள்ளதும், கடந்த புதன்கிழமை காலை வீட்டில் திடீரென குழந்தை பிறந்தவுடன் தனது தாய் தனலெட்சுமி குழந்தை வேண்டாம் என்று கூறியதால் கழிவு நீர் கால்வாயில் தூக்கி வீசி சென்றதும் தெரிய வந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து ரேவதி மீது வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். மேலும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், நன்கு உடல்நிலை தேறியுடன் மதுரை பெண்கள் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்படுவார் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment