கொண்டையம்பட்டி வகுத்து மலை அடிவாரத்தில் அமைந்துள்ள தில்லை சிவகாளியம்மன் கோவில் 14 ஆம் ஆண்டு அமுது படையல் மற்றும் வளைகாப்பு விழா :
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள கொண்டையம்பட்டி வகுத்து மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தில்லை சிவகாளிக்கு 14ஆம் ஆண்டு அமுது படையல் மற்றும் வளைகாப்பு விழா நடைபெற்றது.
நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அன்று மாலை 6:00 மணிக்கு ஸ்ரீ தில்லை சிவகாளிக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து, நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் இரவு ஏழு மணி அளவில் அக்னி சட்டி எடுக்கும் பக்தர்கள் கோவிலுக்கு வந்து காப்பு கட்டி கொண்டனர். அதனைத் தொடர்ந்து, 10.05.2024. வெள்ளிக்கிழமை ஸ்ரீ சிவ சுப்பிரமணியர் ஸ்ரீ தில்லை சிவகாளி மற்றும் அனைத்து பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது. அன்று மாலை 108 திருவிளக்கு பூஜையும் இரவு கும்மி பாட்டு மற்றும் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இரவு 12 மணிக்கு ஸ்ரீ சுடலை மாடனுக்கு எரிசோறு கொடுத்தல், ஊட்டு எடுத்தல் மற்றும் அபிஷேகத்துடன் கூடிய சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மறுநாள் சனிக்கிழமை அம்மனுக்கு 24 மணி நேரம் தொடர் அமுது படைத்தல் மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது. தொடர்ந்து, பூப்பனித நீராட்டு விழா மற்றும் சீர் கொண்டு வருதல் விழாவும் நடைபெற்றது. திருநங்கை தலைவி நூரிஅம்மாள், ஐஸ்வர்யா, நான் கடவுள் கீர்த்தனா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அன்று பிற்பகல் 12 மணிக்கு அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியும் குழந்தை வரம் வேண்டும் பக்தர்கள் மற்றும் தம்பதியர்களுக்கு தம்பதியர் பூஜையும் ராகு கேது பரிகார பூஜை சகலதோஷங்கள் நீங்கவும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. கோவிலுக்கு வருகை தந்த தம்பதியரின் பெண்களுக்கு மட்டும் வளைகாப்பு பூஜை பொருட்கள் வழங்கப்பட்டது. அன்று இரவு 7 மணிக்கு கொண்டையம்பட்டி மந்தையில், வீற்றிருக்கும் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் இருந்து அம்மனுக்கு பக்தர்கள் அக்கினி சட்டி மற்றும் முளைப்பாரி எடுத்து வந்தனர். தொடர்ந்து, முளைப்பாரி வைத்து கும்மி கொட்டுதல் மற்றும் அம்மனுக்கு பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இரவு 11 மணிக்கு மேல் அம்மனுக்கு சிறப்பு யாகமும் நடைபெற்றது. பக்தர்களுக்கு பொருளாதார தடை நீங்க குடும்ப பிரச்சனை தீர முன்னோர்கள் பாவ சாபம் நீங்க பித்ரு தோஷம் நீங்க திருமண தடை அகல குழந்தை பேரு கிடைக்க தெரிந்த கணவன் மனைவி ஒன்று சேர நினைத்த காரியங்கள் விரைந்து நடைபெற இவை அனைத்திற்கும் கோவில் வாலாக பகுதியில் சிறப்பு யாகம் மற்றும் அர்த்த சாம பூஜை சக்தி கிடாய் வெட்டுதல், அம்மனுக்கு குருதி அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை அன்று அடசல் பூஜை அன்று இரவு பள்ளயம் (படையல்) பிரித்தலும் ஸ்ரீ தில்லை சிவகாளி அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெற்றது. கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள் மற்றும் சுற்று வட்ட கிராம பொதுமக்களுக்கும் கோவிலின் சார்பாக பூஜை பொருட்களும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த திருவிழாவுக்கான ஏற்பாடுகளை, ஓம் ஸ்ரீ ஹரிபகவான் மற்றும் ஓம் சிவசுப்பிரமணியர் ஆலய பக்தர்கள் செய்திருந்தனர்..
No comments:
Post a Comment