காரியாபட்டி - கள்ளிக் குடி சாலையில் போக்கு வரத்துக்கு இடையூராக கிடந்த மண் அகற்றும் பணி:
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி - கள்ளிக்குடி சாலையில், ஒரங்களில் தேங்கி கிடக்கும் மணி அகற்றும் பணி நடை பெற்றது. விருதுநகர் மா வட்டம், காரியாபட்டியில் கலைஞர் நகர்புற வளர்ச்சி திட்டத்துக்குட்பட்ட திருச்சுழி கள்ளிக்குடி சாலை - மற்றும் மதுரை சாலையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி தீவிரமாக நடை பெற்று வருகிறது. என்.ஜி.ஓ. நகரிலிருந்து பாண்டியன் நகர் முக்குரோடு வரை மழைநீர் வடிகால் அமைக்கும் பணி முழுவதுமாக முடிக்கப் பட்டுள்ளது. பாண்டியன நகர் முக்கு ரோட்டிலிருக்கு லார்கால அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. கள்ளிக்குடி சாலையில் , ஓரங்களில் மண் தேங்கி கிடப்பதால் பொதுமக்களுக்கு போக்கு வரத்துக்கு சிரமங்கள் ஏற்படு கிறது. இதனால், பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் சாலை ஓரத்தில் தேங்கி கிடக்கும் மண் குவியல் அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை, பேரூராட்சித் தலைவர் செந்தில் பார்வை யிட்டார். பேரூராட்சி கவுன்சிலர்கள் சரஸ்வதி, பாண்டியராஜன் , சங்கரேஸ்வரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment