மதுரை மாவட்டம் திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் 14.05.2024 - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday 14 May 2024

மதுரை மாவட்டம் திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் 14.05.2024

 


மதுரை மாவட்டம் திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் 14.05.2024


இதுவரை 15 கோடிக்கு 4365 மெட்ரிக் டன் அளவுள்ள 53 வகையான விளைபொருட்கள் விற்று தரப்பட்டுள்ளது .

கர்நாடக மாநிலம் மைசூர் விவசாயிகளுக்கு இருங்கு சோளம் விவசாயிகள் திருமங்கலம் வராமலேயே அனுப்பி  வைக்கப்பட்டுள்ளது.


சேலம் மாவட்டம் ஆத்தூர் விவசாயியின் துவரை திருப்பூர் மாவட்டத்திற்கு விற்று தரப்பட்டது.

வைரவத்தம் பெண் இயற்கை விவசாயியின் தர்பூசணி பழம் விற்று தரப்பட்டது.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில்
விடத்தகுளம் ரோட்டில் அமைந்துள்ள திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று (14.05.2024) கீழ்க்கண்ட விளைபொருட்கள் இ-நாம் ஏலம் மூலம் விற்பனை செய்து தரப்பட்டது.


1. செங்கப்படை கிராமத்தைச் சேர்ந்த  விவசாயியின்  9000 கிலோ இருங்குசோளம் ஏலத்திற்கு வந்தது.  இது கர்நாடகா மாநிலம் மைசூர் விவசாயிகளுக்கு விதை பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டது.  கிலோ ஒன்றிற்கு  அதிகபட்ச விலையாக ரூ 41/-க்கு விலை போனது. இதன் மூலம் ரூ3,69,000/-க்கு வர்த்தகம் நடைபெற்றது.

2. உசிலம்பட்டியை சேர்ந்த விவசாயியின்  14860 கிலோ  செங்கட்டான் சோளம் ஏலத்திற்கு வந்தது‌. அது கிலோ ஒன்றிற்கு  அதிகபட்ச விலையாக ரூ 53.47/- க்கு விலை போனது. இதன் மூலம் ரூ 7,94,564/-க்கு வர்த்தகம் நடைபெற்றது.

3. சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த விவசாயின்  825 கிலோ துவரை ஏலத்திற்கு வந்தது.  திருப்பூர்க்கு விற்று தரப்பட்டது. இது  கிலோ ஒன்றிற்கு  அதிகபட்ச விலையாக ரூ 825/-க்கு விலை போனது. இதன் மூலம் ரூ 72,600/-க்கு வர்த்தகம் நடைபெற்றது.

4. அரியலூர் மாவட்டம் மேலனிக்குழியை சேர்ந்த விவசாயின்  125 கிலோ நாட்டுகம்பு ஏலத்திற்கு வந்தது.  இது  கிலோ ஒன்றிற்கு  அதிகபட்ச விலையாக ரூ 65.35/-க்கு விலை போனது. இதன் மூலம் ரூ 8,169/-க்கு வர்த்தகம் நடைபெற்றது.

5. எஸ்.பி.நத்தம் மற்றும் காளப்பன்பட்டி ஆகிய  கிராமங்களை சேர்ந்த இரண்டு விவசாயின்  260 கிலோ எள் ஏலத்திற்கு வந்தது.  அது கிலோ ஒன்றிற்கு  அதிகபட்ச விலையாக ரூ 145/-க்கும் குறைந்தபட்சமாக 140/-க்கும்  விலை போனது. இதன் மூலம் ரூ 36,700/-க்கு வர்த்தகம் நடைபெற்றது.

6. வைரவ நத்தம்  கிராமத்தை சேர்ந்த விவசாயியின்  3020 கிலோ தர்பூசணி  ஏலத்திற்கு வந்தது.  அது கிலோ ஒன்றிற்கு  அதிகபட்ச விலையாக ரூ 17.40/-க்கு விலை போனது. இதன் மூலம் ரூ 52,548/-க்கு வர்த்தகம் நடைபெற்றது.

7. திருமங்கலம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின்  10 கிலோ சாமையரிசி ஏலத்திற்கு வந்தது. அது  கிலோ ஒன்றுக்கு ரூ 90/-க்கு விலை போனது. இதன் மூலம் ரூ 900/-க்கு வர்த்தகம் நடைபெற்றது.

8. திருமங்கலம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின்  10 கிலோ வரகு அரிசி ஏலத்திற்கு வந்தது. அது  கிலோ ஒன்றுக்கு ரூ 82/-க்கு விலை போனது. இதன் மூலம் ரூ 820/-க்கு வர்த்தகம் நடைபெற்றது.

9. திருமங்கலம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின்  4 கிலோ குதிரைவாலி அரிசி ஏலத்திற்கு வந்தது. அது  கிலோ ஒன்றுக்கு ரூ 82/-க்கு விலை போனது. இதன் மூலம் ரூ 388/-க்கு வர்த்தகம் நடைபெற்றது.

10. கள்ளிக்குடி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின்  351 கிலோ அவுரி ஏலத்திற்கு வந்தது. அது  கிலோ ஒன்றுக்கு ரூ 33.50/-க்கு விலை போனது. இதன் மூலம் ரூ 11759/-க்கு வர்த்தகம் நடைபெற்றது.

11. திருமங்கலம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின்  49.700 கிலோ ஆவாரம்பூ ஏலத்திற்கு வந்தது. அது  கிலோ ஒன்றுக்கு ரூ 90/-க்கு விலை போனது. இதன் மூலம் ரூ 4473/-க்கு வர்த்தகம் நடைபெற்றது.


12. செங்கப்படை  கிராமத்தை சேர்ந்த விவசாயின்  97 கிலோ வேப்பமுத்து ஏலத்திற்கு வந்தது.  அது கிலோ ஒன்றிற்கு  அதிகபட்ச விலையாக ரூ 35/-க்கு விலை போனது. இதன் மூலம் ரூ 3395/-க்கு வர்த்தகம் நடைபெற்றது.

13. உவரி மற்றும் துவரிமான் ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகளின்  109 கிலோ கொப்பரை ஏலத்திற்கு வந்தது.  அது கிலோ ஒன்றிற்கு  அதிகபட்ச விலையாக ரூ 82/-க்கு விலை போனது. இதன் மூலம் ரூ 8938/-க்கு வர்த்தகம் நடைபெற்றது.

14. கே.வெள்ளாகுளம் கிராமத்தை சேர்ந்த விவசாயின்   118 கிலோ உளுந்து ஏலத்திற்கு வந்தது.  அது கிலோ ஒன்றிற்கு  அதிகபட்ச விலையாக ரூ 100/-க்கு விலை போனது. இதன் மூலம் ரூ 11,800/-க்கு வர்த்தகம் நடைபெற்றது.

15. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சேர்ந்த விவசாயியின் 60 கிலோ சூரியகாந்தி ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றுக்கு 50/- க்கு விலை போனது. இதன் மூலம் 3000/-க்கு வர்த்தகம் நடைபெற்றது.

16. உசிலம்பட்டி மற்றும் செங்கப்படையை  சேர்ந்த விவசாயிகளின்  1000 கிலோ கம்பு ஏலத்திற்கு வந்தது.  அது கிலோ ஒன்றிற்கு  அதிகபட்ச விலையாக ரூ 34/-க்கு விலை போனது. இதன் மூலம் ரூ 34000/-க்கு வர்த்தகம் நடைபெற்றது
17. குராயூர் கிராமத்தை சேர்ந்த விவசாயின்  100 கிலோ பாரம்பரிய நெல் வகையான சித்ரகார் ஏலத்திற்கு வந்தது.  அது கிலோ ஒன்றிற்கு  அதிகபட்ச விலையாக ரூ ₹36/-க்கு விலை போனது. இதன் மூலம் ரூ 36000/-க்கு வர்த்தகம் நடைபெற்றது.
        

       ஆக மொத்தம்  ரூபாய் 13,46,453/-க்கு வர்த்தகம் நடைபெற்றது.

    இதுவரை திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் மூலம்15 கோடிக்கு  4365 மெட்ரிக் டன் அளவுள்ள 53 வகையான விளை  பொருட்களை  விற்று தரப்பட்டுள்ளது.
     
       *மேலும் விவசாயிகள் திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் வேளாண் விளைபொருட்கள் விலை நிலவரத்தை அறிந்து கொள்ளவும்  தங்களது விளை பொருட்களை நல்ல விலைக்கு விற்க கீழ்கண்ட வாட்ஸ்அப் இணைப்பின் மூலம் இணைந்து அறிந்துகொள்ளலாம்.*



     இதேபோல் வியாபாரிகள் திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் விளைபொருட்கள் இருப்பினை தெரிந்து கொள்ளவும்  தேவையான விளை  பொருட்களை வாங்குவதற்கும் கீழ்கண்ட வாட்ஸ்அப் இணைப்பின் மூலம் இணைந்து பயன்பெறலாம்.



         மேலும்  விபரங்களுக்கு G.வெங்கடேஷ், கண்காணிப்பாளர் அவர்களை  9025152075லும் மேற்பார்வையாளரை 9600802823 லும் சந்தை பகுப்பாளரை 8754379755 லும் ஆகிய எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Post Top Ad