சித்திரை மாதம் பிறந்து விட்டாலே மதுரையில் இருக்கும் மக்களுக்கு ஒரு விதமான மகிழ்ச்சி - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Sunday 21 April 2024

சித்திரை மாதம் பிறந்து விட்டாலே மதுரையில் இருக்கும் மக்களுக்கு ஒரு விதமான மகிழ்ச்சி


 சித்திரை மாதம் பிறந்து விட்டாலே மதுரையில் இருக்கும் மக்களுக்கு ஒரு விதமான மகிழ்ச்சி ஏன் என்றால் சித்திரை திருவிழா ஆரம்பித்து விட்டது என்று. இதில் கொடியேற்றி  ஆரம்பமாகும் திருவிழா கள்ளழகர் திரும்பும் வரை கொண்டாட்டம் தான். அப்படி பட்ட மதுரையில் மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாண வைபவம் இன்று நடைபெற்றது. மீனாட்சிக்கு திருமாங்கல்யம் செய்த ஊர் என்பதால் திருமங்கலம் என்று பெயர் பெற்றது. அப்படி பட்ட திருக்கோவில் இன்று அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாண வைபவம் இன்று காலை எட்டு மணிக்கு ஆரம்பமாகி ஒன்பது மணிக்குள் நடைபெற்றது. சிவாச்சாரியர்கள் வேதங்கள் முழங்க சிறப்பாக நடைபெற்றது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு மீனாட்சி சொக்கநாதரை நீண்ட வரிசையில் நின்று வணங்கி சென்றனர். திருமணம் ஆன  பெண்கள் மஞ்சள் கயிறு மாற்றி கொண்டனர்.இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை திருமங்கலம் இந்து அறநிலையத்துறைய அதிகாரிகள் காவல்துறையினர் செய்திருந்தனர்.


திருமங்கலம் செய்தியாளர்
R. வினோத் பாபு

No comments:

Post a Comment

Post Top Ad