சித்திரை திருவிழா மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தில் பங்கேற்க இன்று திருப்பரங்குன்றம் முருகன் மதுரை புறப்படுகிறார். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Sunday 21 April 2024

சித்திரை திருவிழா மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தில் பங்கேற்க இன்று திருப்பரங்குன்றம் முருகன் மதுரை புறப்படுகிறார்.


சித்திரை திருவிழா மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தில் பங்கேற்க இன்று திருப்பரங்குன்றம் முருகன் மதுரை புறப்படுகிறார்.



மதுரை சித்திரை திருவிழாவையொட்டி நடைபெறும் மீனாட்சி சுந்தரேசுவரர் திருமண வைபவத்தில் கலந்து கொள்ள திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் தெய்வானையுடன் இன்று மதியம் மதுரைக்கு புறப்படுகிறார். அவருடன் மீனாட்சியை சொக்கநாதருக்கு தாரை வார்த்துக்கொடுக்க பவளக் கனிவாய் பெருமாளும் செல்கிறார்.


திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் ஆண்டுக்கு 2முறை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பிப்பது வழக்கம். மீனாட்சி சொக்கநாதர் திருமண வைபவம் மற்றும் புட்டு திருவிழாவில் அவர் பங்கேற்று மதுரையில் உள்ள மக்களுக்கு தரிசனம் தருவது வழக்கமாக நடைபெற்று வருகிறது.


மதுரை மீனாட்சிஅம்மன் கோவிலில் சித்திரை திருவிழா வரும் 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது.


இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற ஏப்ரல் 21 ந்தேதி மீனாட்சி சொக்கநாதர் திருமண வைபவம் நடைபெறுகிறது. இந்த விழாவில் பெற்றோர் திருமணத்தை காண திருப்பரங்குன்றத்தில் இருந்து முருகப்பெருமான், தெய்வானை ஆகியோர் இன்று கோவிலில் இருந்து புறப்பாடாகிறார்கள்.  அவர்களுடன் மீனாட்சியை தாரை வார்த்துக் கொடுக்க பவளக் கனிவாய் பெருமாளும் உடன் பல்லக்கில் புறப்பாடாகிறார்.


மதுரை செல்லும் சுப்பிரமணியசாமி 21-ந்தேதி திருக் கல்யாண வைபவம் முடிந்து அங்கு ஆவணி மூல வீதிகளில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். தொடர்ந்து 24 -ந் தேதி பூப்பல்லக்கில் முருகப்பெருமான் தெய்வானையுடன் பவளக் கனிவாய் பெருமா ளும் புறப்பாடாகி திருப்பரங்குன்றம் வந்தடைவார்கள்.


மேலும் சுவாமி திருப்பரங்குன்றம் கோவிலில் இருந்து புறப்படும்போதும், திரும்ப வரும்போதும் பக்தர்கள் ஆங்காங்கே திருக்கண் அமைத்து சுவாமியை தரிசனம் செய்வார்கள். இந்த விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad