திமுகவின் தேர்தல் அறிக்கை கானல் நீர் அதிமுகவின் தேர்தல் அறிக்கை ஊற்றுநீர் மதுரை சமயநல்லூரில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேட்டி. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Sunday 7 April 2024

திமுகவின் தேர்தல் அறிக்கை கானல் நீர் அதிமுகவின் தேர்தல் அறிக்கை ஊற்றுநீர் மதுரை சமயநல்லூரில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேட்டி.


மதுரை மாவட்டம், சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட சமயநல்லூரில், அதிமுக தேனி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் நாராயண சாமிக்கு வாக்குகள் கேட்டு முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த ஆர்பி உதயகுமார் கூறும்போது:  திமுகவின் தேர்தல் அறிக்கை கானல்நீராக உள்ளது. 

அதிமுகவின் தேர்தல் அறிக்கை ஊற்றுநீராக உள்ளது அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் அம்மா கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தும் எவ்வாறு நிறைவேற்ற பட்டதோ அதேபோல் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் சொன்ன திட்டங்கள் நிறைவேற்றப்படும்.


ராமநாதபுரத்தில் நிற்கும் ஓபிஎஸ் எம்எல்ஏ பதிவை ராஜினாமா செய்துவிட்டு, நிற்க வேண்டும் இரட்டை இலை சின்னத்தை ஒழிப்பேன் என்று சொல்வது ஓபிஎஸ் இன் ஆணவம் தலைக்கனம் சொந்த மாவட்டத்தில் தேனியில் தன் பலத்தை நிரூபிக்காமல் ராமநாதபுரத்தில் நிற்பது அவருக்கு பலவீனமாகத்தான் அமையும் இரட்டை இலை சின்னத்தை ஒழிப்பேன் என்று கூறி எந்த கோட்டையைப் பிடிக்கப் போகிறாரோ அவருக்கு என்ன பலம் உள்ளது. அவருக்கு கட்சி முக்கியமில்லை தனிநபர் செல்வாக்கை நிரூபிக்கவே அவர் ராமநாதபுரத்தில் நிற்கிறார். 


ஆகையால், ராமநாதபுரம் வாக்காளர்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் தனிநபர் செல்வாக்கா  இரட்டை இலை செல்வாக்கா என்று ராமநாதபுரம் மக்கள் தீர்மானிப்பார்கள். ஓபிஎஸிற்கு அனைத்து பதவிகளும் கொடுத்தாயிற்று இனி பிரதமர் பதவி தான் தரவேண்டும் அதை நாங்கள் தர முடியாது பாஜக தான் தர வேண்டும் பாஜக மோடிக்கு தருமா ஓபிஎஸ்-க்கு தருமா அதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும் .



அதிமுகவில் எம்.எல்.ஏ. பதவி தந்தாயிற்று வருவாய் துறை அமைச்சர் பதவியும் தந்தாயிற்று, பொதுப்பணித்துறை அமைச்சர் பதவியும் தந்தாயிற்று, துணை முதல்வர்  பதவியும் தந்தாயிற்று, முதலமைச்சர் பதவியும் தந்தாயிற்று, இனி பிரதமர் பதவி ஒன்று தான் உள்ளது. அதை பிஜேபி தான் தர வேண்டும். ஓபிஎஸ் மக்கள் சேவைக்கு நிற்கவில்லை. தங்களது சுயநலத்திற்காக நிற்கிறார்.


பாஜக வெற்றி பெற்று எம்பிக்கள் பாராளுமன்றம் செல்வார்கள் மற்றவர்கள் இரும்பு கடைக்கு தான் செல்வார்கள் என்று அண்ணாமலை கூறியதாக கேட்ட கேள்விக்கு, அண்ணாமலை ரெடிமேட் அரசியல்வாதி பாஜக அண்ணாமலையை ரெடிமேடாக தலைவராக இறக்குமதி செய்துள்ளது. காலையில் புத்தகத்தை படித்து அதை  மீடியாக்காரர்களிடம் அப்படியே ஒப்பிப்பது மறுபடி போய் படிப்பது மறுபடி ஒப்பிப்பது இந்த வேலையை தான் செய்து கொண்டிருக்கிறார் ஈயம் பித்தளைக்கு பேரிச்சம்பழம் விற்பவர் காலையில் மனப்பாடம் பண்ணி மனப்பாடம் பண்ணி பேசிக் கொண்டிருக்கிறார்.


அவரின் அரசியல் வாழ்வு பாராளுமன்றத் தேர்தல் ரிசல்ட் வரும்போது தெரியும் என பேசினார். இதில், முன்னாள் எம்எல்.ஏ.க்கள் கருப்பையா, மாணிக்கம், யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா, மற்றும் சமயநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் மலையாளம் உள்ளிட்ட நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad