மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகா கே.சென்னம்பட்டி கிராம பகுதியில் கேரளாவைச் சேர்ந்த தனியார் உரத்தொழிற்சாலை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இறைச்சி கழிவுகளை சுத்திகரித்து உரமாக மாற்றும் பணி நடைபெறுகிறது. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Wednesday 24 April 2024

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகா கே.சென்னம்பட்டி கிராம பகுதியில் கேரளாவைச் சேர்ந்த தனியார் உரத்தொழிற்சாலை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இறைச்சி கழிவுகளை சுத்திகரித்து உரமாக மாற்றும் பணி நடைபெறுகிறது.


மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகா கே.சென்னம்பட்டி கிராம பகுதியில் கேரளாவைச் சேர்ந்த தனியார் உரத்தொழிற்சாலை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இறைச்சி கழிவுகளை சுத்திகரித்து உரமாக மாற்றும் பணி நடைபெறுகிறது. இதனால் அந்த பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் மற்றும் காற்று மாசு படுவதாக கூறி அந்த பகுதியை சேர்ந்த 6 கிராம மக்கள் கடந்த வாரம் தேர்தலை புறக்கணித்திருந்தனர். இந்த நிலையில்,  மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் மதுரை மாவட்ட ஆட்சியர் இது சம்பந்தமாக அறிக்கை கேட்டிருந்தார், அதற்கு பதில் அளித்த மாசு கட்டுப்பாட்டு வாரியம் சம்மந்தப்பட்ட தொழிற்சாலை சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடைபெறுவதாக தெரிவித்திருந்தது.


இந்த நிலையில் இந்த தொழிற்சாலை நிரந்தரமாக மூடக்கோரி சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் இந்த பகுதி சேர்ந்த பொதுமக்களுடன்  சேர்ந்து கள்ளிக்குடி நெடுஞ்சாலையில் சாலை மறியல் ஈடுபட்டார்.  அப்போது பொதுமக்கள் தமிழக அரசு இந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் ஆலையை மூடும் வரை தொடர் போராட்டம் நடத்துவோம் என்ற கண்டன முழக்கமிட்டனர். போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னம்பட்டி ஆவல்சூரன்பட்டி பேய்குளம் உள்ளிட்ட 30 கிராம மக்கள் அச்சுறுத்தும் இந்த தொழிற்சாலையை அகற்ற வேண்டும் என்று மக்கள் கோரிக்கை அளித்துள்ளனர். ஓட்டுபதிவின் போது இந்தச்  ஆலை இயங்குவதாக மக்கள் குற்றம் சாட்டி இருக்கிறார்கள் இதை நிரந்தரமாக அகற்ற மக்கள் போராடி வருகிறார்கள்.ஆனாலும் நடவடிக்கை எடுக்கவில்லை
இந்த தொழிற்சாலையால் மக்களுக்கு எந்த முன்னேற்றமும் இல்லை, எந்த வேறு வேலை வாய்ப்பு இல்லை இந்த பொருளாதாரம் இல்லை மக்களுக்கு கேடு விளைவிக்கும் இந்த தொழிற்சாலையை எங்கே வேண்டுமானாலும் மாற்றி கொள்ளட்டும்.  ஆனால் மக்களின் விருப்பத்துக்கு மாறாக இயங்கக் கூடாது நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தினார். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

திருமங்கலம் செய்தியாளர் R.வினோத் பாபு

No comments:

Post a Comment

Post Top Ad