ஒரு தொகுதிக்கு ஐந்து இடங்களில் மக்கள் தாகம் தணிக்கும் புனித பணி செய்யும் இயக்கம் அ.தி.மு.க., ஆர்.பி.உதயகுமார் பேச்சு: - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Thursday 25 April 2024

ஒரு தொகுதிக்கு ஐந்து இடங்களில் மக்கள் தாகம் தணிக்கும் புனித பணி செய்யும் இயக்கம் அ.தி.மு.க., ஆர்.பி.உதயகுமார் பேச்சு:

 


ஒரு தொகுதிக்கு ஐந்து இடங்களில் மக்கள் தாகம் தணிக்கும் புனித பணி செய்யும் இயக்கம் அ.தி.மு.க., ஆர்.பி.உதயகுமார் பேச்சு:


மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க சார்பாக பஸ் நிலையம் முன்பு பொது மக்க ளின் கோடைகால வெயில் தாகத் தை தணிக்கும் வகையில் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் உத்தரவின் பேரில் நீர், மோர்,தண் ணீர் பந்தல் திறப்பு விழா நடந்தது. இந்த விழாவிற்கு, ஒன்றிய செயலாளர்கள் காளிதாஸ் தலைமை தாங் கினார். முன்னாள் எம்.எல்.ஏ. க்.கள் கருப்பையா, மாணிக்கம்,மகேந்திர ன், தேனி தொகுதி அ.தி.மு.க வேட் பாளர் நாராயணசாமி, யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாசறை  மாவட்ட துணைச் செயலாளர் எம்.கே. மணிமாறன் வரவேற்றார். இந்த விழாவில், நீர் மோர், தண்ணீர் பந்த லை, மாவட்ட கழக செயலாளர் முன் னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமா ர் திறந்து வைத் து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-


கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின் பேரில், தமிழக முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் ஒரு தொகுதிக்கு குறைந்தது ஐந்து இடங்களில் பொது மக்களின் கோடைகால வெயிலின் தாக்கத்தில் ஏற்படும் தாகத்தை தணிக்கும் புனித பணி யினை தொடங்கி வைக்கப் பட்டுள்ளது. இதில், நீர் மோர், தண்ணீர், தர்பூசணி, இளநீர் ஆகியவை வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் இந்த புனித பணி யை செய்து வரும் இயக்கமாக அ.தி.மு.க இயக்கம் இருந்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். இதில்,ஜெயராமன், செந்தாமரைக்கண்ணன், விஸ்வநாதன், பெரியகறுப்பன், பிரசன்னா, ரவி, ராஜா, மாணிக்கம்,நாகராஜ், சுந்தர்ராஜ், வீரு, குழந்தைவேலன், செந்தில், சசி, மலைச்சாமி, பிச்சை, தர்மர், அழகர், சசி, கிருஷ்ணசாமி, நல்லக்குட்டி, மூர்த்தி, மணி, ஜெயக்குமார், அழகுராஜா, தவமணி, பாலன், சந்திராபோஸ், நாகமணி உள்பட கலந்து கொண்டனர். முடிவில், ஊராட்சி மன்றத் தலைவர் ஆலயமணி நன்றி கூறினார்.


அதேபோல், வாடிப்பட்டி அ.தி.மு.க.பேரூர் கழகம் சார்பாக சந்தைவாசல் எதிரில் பேரூர் செயலாளர் அசோக்குமார் தலை மையில் மாவட்டச் செயலாளர் ஆர்.பி. உதயகுமார் நீர் மோர் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். 


இதில், மாவட்ட மகளிர் அணி செயலாளர் வழக்கறிஞர் லட்சுமி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad