இந்த பிரச்சாரத்தில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தமிழழகன் தலைமை தாங்கினார்.திருமங்கலம் ஒன்றிய கழகச் செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார். இதில் தேமுதிக மாவட்ட செயலாளர் கணபதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், மாவட்ட அவை தலைவர் முருகன், மாவட்ட பொருளாளர் திருப்பதி, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ராமகிருஷ்ணன் முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெயராமன், ஒன்றிய கழக செயலாளர் ராமசாமி, பொதுக்குழு உறுப்பினர் சுமதி சாமிநாதன், கழக மாணவரணி துணை செயலாளர் முத்து செல்வம, மற்றும் ஆண்டிச்சாமி, சிவசக்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் வாக்கு சேகரித்து பேசியதாவது, விஜய பிரபாகரன் முதன் முதலில் தேர்தலில் நிக்கிறார்கள் அவருடைய தந்தையார் மக்களுக்காக உழைத்தவர் 2011 இல் அம்மாவோடு கூட்டணி சேர்ந்து அம்மா முதலமைச்சராகவும் கேப்டன் அவர்கள் எதிர்க்கட்சி தலைவராகவும் தமிழக மக்கள் தீர்ப்பளித்து எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாத அளவிற்கு திமுகவிற்கு தோல்வியை பரிசாக கொடுத்த வரலாறு 2011 இருந்தது. கூட்டணி தொடர்ந்து இருந்தால் திமுக எங்கே இருக்கிறது என தேடக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கும்
திமுக வாக்குறுதி கொடுத்தால் தண்ணீரில் கோலம் போடுவது போல தண்ணீரில் எத்தனை தடவை கோலம் போட்டாலும் அது நிற்குமா? அழிந்து போய்விடும் அதிமுக தேர்தல் வாக்குறுதி என்பது கோவிலில் கோலம் போடுவது போல தெய்வத்திற்கு நிலைத்து நிற்கும் என பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது, பாஜக உடன் அதிமுக கள்ள உறவு வைத்ததாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறியதற்கு? இல்லாத மாயத் தோற்றத்தை உருவாக்க நினைக்கிறார் மக்களிடம் எடுபடாது. எடப்பாடியார் வெளிப்படையாக கூறுகிறார் என்ன முடிவு எடுத்தாலும் உறுதியாக உள்ளார் .தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும் நல்ல உறவு, கள்ள உறவு என சொன்னாலும் நாங்கள் வைத்திருக்கிற தெய்வீக உறவு தமிழ்நாட்டு மக்களோடு தான். எடப்பாடியார் தெய்வீக பந்தம் தமிழ்நாட்டு மக்களால் அதிமுக உறவு தெய்வீக உறவு நிரந்தரமான உறவு அந்த உறவை இடைவெளி ஏற்படுத்தும் வேண்டும் என்பதற்காக இல்லாத பொல்லாததை அவர் சொல்லிப் பார்க்கிறார் எடுபட மாட்டேங்குது.
கள்ள உறவு என்றால் விளக்கு பிடித்தாரா முதலமைச்சர் மு க ஸ்டாலின்? ஒரு நாகரிகமாக பேச வேண்டும் கூட்டணி விட்டு வெளியே வந்து விட்டோம் 40 வேட்பாளர்களை போட்டு உள்ளோம் மக்கள் எங்கள் மீது அதிமுக கூட்டணி மீது வைத்திருக்கிற நம்பிக்கை சிதைக்கிற வகையில் திசைதிருக்கிற வகையில் கூறுகிறார் கள்ள உறவுக்கு ஸ்டாலின் விளக்கு பிடித்தாரா?ஆமாம் என்று சொன்னால் அதற்குப் பின் நாங்கள் விளக்கம் தருகிறோம்.
டிடிவி தினகரன் குறித்த கேள்விக்கு? போன தேர்தலில் கூட இதே இடத்தில் வந்து என்னை தோற்கடிப்பதற்காக எல்லா வேலை பார்த்தார் அவரும் நாயாக அலைந்து பார்த்தார் தோல்வி தான் கிடைத்தது. கட்சிக்கு தலைவர் என்று கூறுகிறார் நாவடக்கம் வேண்டும் அதிகாரம் மமதையில் இன்னும் இறங்கவில்லை தன்னிடம் இருந்த செல்வாக்கை எல்லாம் இழந்து நிற்பதற்கு காரணம் அவரிடம் நாவடக்கம் இல்லாததுதான்.
எல்லோரும் எரிந்து பேசுவது மனிதனை மனிதனாக மதிக்கத் தெரியாத ஒரு மனித இனத்தைச் சேர்ந்தவர். அவரைவிட என்னால் திறமையாக பேச முடியும் அரசியல் நாகரிகம் கருதி அவர் நாவடத்தோடு பேசி பிரச்சாரத்தை மேற்கொண்டு மக்களை சந்தித்தால் அவருக்கும் நன்மை இல்லை ,இருக்கிற செல்வாக்கை இழந்து போவார்.
திருமங்கலத்தில் சட்டமன்றத் தேர்தலில் தெருத்தெருவாக பேசித்தான் பார்த்தார் என்ன செய்ய முடிந்தது .15 ஆண்டுகள் ஆகிவிட்டது தேர்தல் களத்தில் இருந்த நிதர்சனம் தெரியவில்லை. களநிலவரம் தெரியவில்லை. அவர் இடைவெளி ஏற்பட்ட காரணத்தால் திக்கு தெரியாமல் அலைகிறார் .
பாரதிய ஜனதா கட்சியோடு எங்களை கூட்டணி வைக்க சொல்கிறீர்களே தற்கொலைக்கு சமம் என கூறியவர் இந்த டிடிவி தினகரனா? வேற டிடிவி தினகரனா? அந்த கேள்விக்கு பதில் சொல்லச் சொல்லுங்கள். அதன் பிறகு நோட்டாவுக்கு கீழ் பாரதிய ஜனதா கட்சி வாங்கும் அந்தக் கட்சியோடு கூட்டணி வைத்தால் தற்கொலைக்கு சமம் அந்த டிடிவி தினகரன் சொன்னீர்கள்
அவர் எங்கே இருக்கிறார் அந்த வீரமுள்ள தன்மானம் உள்ள அந்த டிடிவி தினகரன் தமிழ்நாட்டு மக்கள் தேடுகிறார்கள். தன்மானத்தை இழந்து செல்வாக்கை இழந்து இப்ப இரட்டை இலையை எதிர்த்து நிற்பது உதயகுமார் எதிர்க்கவில்லை இந்த மக்கள் எதிர்க்கிறார்கள் நியாயம் இல்லை. தர்மம் இல்லை? சொல்கிறார்கள்.
ஆகவே எம்பி பதிவிக்காக பெற்றெடுத்த தாயை (இரட்டைஇலையை) எதிர்த்து நின்று பழி சுமத்தி அதற்கு அவதூறு பரப்பி தேர்தல் களத்தில் நிற்பதை இப்பகுதி மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதைத்தான் கூறுகிறோம். தேர்தல் களத்தில் வேட்பாளர்
நாராயணசாமி சாமானியர் எளியவர் எடப்பாடியார் அதிமுக இரண்டு கோடி தொண்டர்களுக்கு சுதந்திரம் கொடுத்து, நிர்வாகத்தில் முழுமையான அதிகாரம் கொடுத்து, நானும் உங்களில் ஒரு தொண்டன் என்று கூறி ,கிளைச் செயலாளர் பொதுச் செயலாளர் வந்திருக்கிறார் ஜனநாயக மகத்துவத்தின் அடையாளமாக எடப்பாடியார் உள்ளார்.
இதை அவர்களால் பொறுத்து முடியவில்லை டிடிவி தினகரனும் ஓபிஎஸ் ஏன் பிரிந்தார்கள்? நாட்டு மக்கள் நாட்டு மக்களுக்கு சேவை செய்வதற்காவா? கொள்கை பிரச்சனையா? ஏன் பிரிந்தார்கள் பதவிக்காக பிரிந்தார்கள், பதவிக்காக சேர்ந்துள்ளார்கள். பதவிக்காக பிரிவதும், தர்ம யுத்தங்களை நடத்துவதும் பின்பு பதவிக்காக ஒன்று சேர்வதும் தொண்டர்களை ஏமாற்றுவதாகும்.
உங்களை நம்பி வந்த 18 சட்டமன்ற உறுப்பினர்கள் நடுத்தெருவில் உள்ளார்கள். செந்தில் பாலாஜி சிறையில் உள்ளார் ,பழனியப்பன் திமுகவில் உள்ளார், தங்க தமிழ்ச்செல்வன் உதயசூரியன் சின்னத்தில் இருக்கிறார் இதற்கு என்ன காரணம்? ஆணவம், அகம்பாவம் ,நாவடக்கம் இல்லாத தன்மை மனிதநேயமற்ற தன்மை ஒரு தலைவனுக்கு இருக்கிற பண்பை எள் முனையளவும் இல்லாததால் எல்லோரும் பிரிந்து சென்று எல்லா மரங்களும் பிரிந்து சென்று தனி மரமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
ஒரு காலத்தில் ஒவ்வொரு தொண்டனும் இரட்டை இலை சொல்லி உங்களுக்காக சுமந்து போராடினார்கள் அந்த தொண்டர்களை எல்லாம் விட்டுப் போவதற்கு என்ன காரணம் இரட்டை இலை எதிர்ப்பதனால் ஒழிக்க முயற்சி செய்வதால் இரண்டு பேர்களும் சேர்ந்து இருப்பது தமிழ்நாட்டு மக்களை வாழ வைப்பதற்காக அல்ல உங்கள் பதவிகளை தக்க வைத்தது கொள்வதற்காக சுயநலத்திற்காக பொதுநலத்திற்கு அல்ல.
நான் இரட்டை இலையில் தான் ஓட்டு கேட்டேன், அன்றைக்கும் இரட்டை இலை ஓட்டு கேட்பேன் இன்றைக்கும் இரட்டை இலையில் ஓட்டு கேட்பேன் நாளைக்கும் இரட்டை இலை தான் கேட்பேன் என் உயிர் போகும் வரை இரட்டை இலை தான் போட்டு கேட்பேன்.
நீங்கள் தான் நேற்று ஒன்று ,இன்று ஒன்று பச்சோதியாக நிறம் மாறுவது நீங்கள் தான் .இன்றைக்கு 2 கோடி தொண்டர்கள் எடப்பாடியார் தலைமையில் சுவாசக்காற்று சுதந்திர காற்று சுவாசிக்கிறார்கள் விசுவாசமாக இயக்கத்திற்கு பணியாற்றுகிறார்கள்.
நிர்வாகத்தில் சுதந்திரம் மக்கள் தொண்டில் சுதந்திரம் அங்கீகாரம் வழங்குவதில் சுதந்திரம் தேர்தல் பணியாற்றுவதில் சுதந்திரம் எடப்பாடியார் தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும் அதிமுக தலைமை தாங்கி வழிநடத்த வேண்டும் என பேசினார்.
No comments:
Post a Comment