மாற்றுத்திறன் மாணவர்களுக்கான கல்வி, கலை, பண்பாடு மற்றும் விளையாட்டில் சம வாய்ப்பு வழங்குவதற்கான போட்டிகள். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Wednesday 6 March 2024

மாற்றுத்திறன் மாணவர்களுக்கான கல்வி, கலை, பண்பாடு மற்றும் விளையாட்டில் சம வாய்ப்பு வழங்குவதற்கான போட்டிகள்.


மதுரை கிழக்கு வட்டார வள மையம் உள்ளடக்கிய கல்வி ENVIRONMENT BUILDING PROGRAM மாற்றுதிறன் கொண்ட குழந்தைகளுக்கான ஏதுவான சூழலை ஏற்படுத்துதல் மூலம் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான கல்வி, கலை, பண்பாடு மற்றும் விளையாட்டில் சம வாய்ப்பு வழங்குவதற்கான போட்டிகள் வட்டார அளவில் நடத்தப்பட்டது. 

மாவட்ட உதவி திட்ட அலுவலர் அவர்கள் சரவண முருகன் அவர்கள் முன்னிலை வகித்தார் .வட்டார கல்வி அலுவலர்கள் ஜான்சி, த எஸ்தர் இந்துராணிஇருவரும்  கலந்து கொண்டு தலைமை வகித்தனர். குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டிகள் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் , கேடயம், பதக்கம் முதலியன வழங்கப்பட்டது. பெற்றோர்களுக்கும் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.


நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைவருக்கும் சிறப்பான மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை மதுரை கிழக்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு  ம.நாகலட்சுமி  மாற்றுத்திறனாளி மாணவர்களின் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் பயிற்றுனர் அ.லதா மற்றும் அனைத்து சிறப்பாசிரியர்களும் நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திருந்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad