ஊராட்சி ஒன்றியம் கூட்டத்தில் கவுன்சிலர்கள் வெளிநடப்பு. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Saturday 2 March 2024

ஊராட்சி ஒன்றியம் கூட்டத்தில் கவுன்சிலர்கள் வெளிநடப்பு.


மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் பொது நிதி உள்ளிட்ட அனைத்து நிதிகளையும் நிறுத்திய மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து அதிமுக,திமுக, தேமுதிக,உள்ளிட்ட அனைத்து கட்சி கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.


ஒன்றிய கூட்டம் குழு தலைவர் லதா ஜெகன் தலைமையில் நடந்தது துணைத் தலைவர் வளர்மதி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நெல்சன் பாண்டியன் முன்னிலை வகித்தனர்.அ.தி.மு.க11,பா.ஜ 1, தி.மு.க 3, தே.மு.தி.க 1,அ.ம.மு.க1,என16 கவுன்சிலர்கள் உள்ளனர். வருகை பதிவேட்டில் கையெழுத்திட்ட பின் அனைத்து கவுன்சிலர்களும் வெளிநடப்பு செய்தனர். அவர்கள் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது சில ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றியத்திற்கு பொது நிதியாக மாதந்தோறும் 44 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது திமுக ஆட்சிக்கு வந்த பின் அந்த தொகை 34 லட்சமாக குறைக்கப்பட்டது. 

கடந்த மாதத்தில் இருந்து அந்த 34 லட்சம் ரூபாயிலும் பாதியை மாவட்ட நிர்வாகம் எடுத்துக் கொண்டது 17 லட்சம் வரை மட்டுமே பொது நிதியாக வழங்கி வருகிறது. இந்தத் தொகையை வைத்து ஊழியர்களுக்கு முழுமையாக சம்பளம் கூட கொடுக்க முடியவில்லை. மேலும் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து பஞ்சாயத்துகளிலும் மரமரத்து பணிகள் கிடப்பில் உள்ளது இதை சரி செய்வதற்கு சரியான நிதி வந்தால் தான் எங்களால் அந்த வேலையை செய்ய முடியும் என்று கவுன்சிலர்கள் கூறினார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad