கருமாத்தூரில் சிலம்பாட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிலம்பபட்டையம் வழங்கும் விழா. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Monday 4 March 2024

கருமாத்தூரில் சிலம்பாட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிலம்பபட்டையம் வழங்கும் விழா.


மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, கருமாத்தூரில் மீசைகாரர் சிலம்பகூடம் நடத்திய சிலம்பாட்ட போட்டியில், வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிலம்பபட்டையம் வழங்கும் விழா நடைபெற்றது. இந்தப் போட்டியில், மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 300 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். 

இப்போட்டியானது, பொன்சங்கரமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. போட்டியில், கலந்து கொண்ட மாணவர்களுக்கு அவரவர் தகுதிக்கு ஏற்ப பச்சை நீலம் மஞ்சல் பட்டையம் வழங்கபட்டது. இதில், உசிலம்பட்டி பகுதியிலிருந்து மாஸ்டர் கெளதம்  தலைமையில் சுமார் 80 மாணவர்கள் கலந்துகொண்டனர். 


பொட்டுலுபட்டியை சேர்ந்த தாரணியா  சுபாஷ், ஆ. புதுபட்டியை சேர்ந்த ஸ்ரீ பதி ஆகியோர் வெற்றி பெற்று பச்சை பட்டையம், பாராட்டுசான்று பரிசுகளை மீசைகார சிலம்பகூடம் தலைவர் பொன்சங்கர் மூர்த்தியிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad