பேரிடர் நிவாரணத் தொகை, மெட்ரோ ரயில் திட்டம் நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு பாரபட்சம் போதை பொருள் கடத்தலில் தமிழகம் தலைமை இடமாக உள்ளது, சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி உதயகுமார் குற்றச்சாட்டு. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Sunday 3 March 2024

பேரிடர் நிவாரணத் தொகை, மெட்ரோ ரயில் திட்டம் நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு பாரபட்சம் போதை பொருள் கடத்தலில் தமிழகம் தலைமை இடமாக உள்ளது, சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி உதயகுமார் குற்றச்சாட்டு.


மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் உள்ள புதுப்பட்டியில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது இந்த முகாமில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் பங்கேற்றார் இந்த நிகழ்ச்சிகள் மாவட்ட அவை தலைவர் சி. முருகன், மாவட்ட பொருளாளர் திருப்பதி, ஒன்றிய கழக செயலாளர் அன்பழகன், ராமையா, பிரபு ,மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தமிழழகன், மாவட்ட பணி நிர்வாகிகள் சரவண பாண்டி, சிவசக்தி, பொதுக்குழு உறுப்பினர் சுமதி சாமிநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


பின்னர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது, தமிழகத்திற்கு அறிவித்த அனைத்து திட்டங்களையும் திமுக அரசு கிடப்பில் போடப்பட்டுள்ளது தொழில் முதலீட்டார்கள் மாநாட்டில் தென் மாவட்டங்களுக்கு நிதியை ஒதுக்கீடு செய்யப்படவில்லை. குறிப்பாக மெட்ரோ ரயில் திட்டத்திற்காக, கோயம்புத்தூரில் அவிநாசி சாலை மற்றும் சத்தியமங்கலம் சாலை வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 10,740 கோடி மதிப்பிற்கும், மதுரை மாநகரில் திருமங்கலம் மற்றும் ஒத்தக்கடை பகுதி இணைக்கும் வகையில் ரூபாய் 11,368 கோடி மதிப்பிற்கும் தயாரிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கைகள் மத்திய அரசின் மூலதன பங்கேற்கு பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


குறிப்பாக மதுரை மாநகரின் போக்குவரத்து நெருக்கடியை தீர்க்கும் வகையில் அமைக்கப்படுவதற்கும் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தமிழக அரசின் பங்களிப்பாக திட்ட மதிப்பீட்டில் 20 சதவீதம், ரூபாய் 1700 கோடி நிதி ஒதுக்கீட்டை இந்த நிதிநிலை அறிக்கை செய்யப்படவில்லை அப்படியானால் இந்த மெட்ரோ ரயில் திட்டம் மதுரைக்கு கிடையாதா என்பதை எல்லாம் இந்த மக்கள் கேள்வி எழுப்புகின்றார்கள்.

டைட்டில் பார்க் அறிவிக்கப்பட்டது அது கிடப்பில் கிடைக்கிறது,மெட்ரோ ரயில் திட்டம் அது கிடப்பில் கிடைக்கிறது, மத்திய சிறைச்சாலை மாற்றம் செய்ய ஏற்கனவே அரசு அறிவித்துள்ள விலையில் அதற்கான நிதி ஒதுக்கீடு நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கவில்லை. மதுரையில விமான நிலைய விரிவாக்க அண்டர் பாஸ் திட்டத்திற்கு எடப்பாடியார் முதலமைச்சராக இருக்கிறபோது மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து அதற்கான என்ஒசி பெறப்பட்டு 100 சகவீதம் திட்டத்திற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டது இப்போது அது திட்டம் என்ன ஆனது என்று தெரியவில்லை 


இது போன்று நாம் பல்வேறு நிலையில் ஆராய்ந்து பார்க்கும் போது குறிப்பாக தென் தமிழ்நாடு மக்கள் வளர்ச்சியை எதிர்பார்த்து ஏக்கத்தோடு காத்திருக்கிறார்களே அவர்களுக்கு ஏதேனும் மகிழ்ச்சி தரக்கூடிய, நம்பிக்கை தரக்கூடிய அறிவிப்புகள் இந்த அரசிலோ, மத்திய அரசிலோ தென் தமிழ்நாடு வளர்ச்சிக்கான எந்த திட்டங்களையும் என்பது, மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது என்பதை நாம் பார்க்கிறோம் தென் தமிழகம் வளர்ச்சி தேய்ந்து கொண்டு வருகிறது.


நாம் ஒரு ஒப்பிடை நாம் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டங்கள் ரூபாய் 61,843 கோடியிலே செயல்படுத்தப்பட்டு வரும் போது 2018 ஆண்டு முதல் திட்டத்திற்கான மத்திய அரசு பங்காக 3,273 கோடி, அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்த ரூபாய் 28,877 கோடியும், பெங்களூரில் மெட்ரோக்கு 19,236 கோடியும், குஜராத்தில் மெட்ரோ திட்டங்களுக்கு 15,218 கோடியும், உத்தரபிரதேசத்தில் மெட்ரோவுக்கு 12,919 கோடியும் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது,


சென்னை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கும் தொகை என்றாலும், பேரிடர் நிவாரண நிதியாக இருந்தாலும் சரி, வளர்ச்சி திட்டங்களுக்கான நிதியாக இருந்தாலும் சரி ,ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை அப்படியே ஒதுக்கினாலும், அது யானை பசிக்கு சோளப் பொறி போல இன்றைக்கு நடத்தப்படுவது வேதனையாக இருக்கிறது.


ஆகவேதான் எடப்பாடியார் , தேசிய கட்சிகள் தமிழக நலனை புறக்கணித்து, நலனை அலட்சியப் போக்கோடு அணுகிற காரணத்தினாலே, தமிழர்களுடைய குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்பதற்காக தமிழர்கள் உரிமை மீட்போம், தமிழகம் காப்போம் என்கிற அந்த லட்சியத்தோடு அனைத்திந்திய அண்ணா திராவிட கழகத்தை களம் காண வைத்துள்ளார், மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி தருவதாக நம்பிக்கை இல்லை, அதே போல் ஆளும் மாநில அரசு 3 ஆண்டுகளாக தமிழக மக்களுக்காக எந்த அக்கறையும் செலுத்தவில்லை.


இந்த இரண்டு அரசும் தமிழகத்தினுடைய வளர்ச்சியிலே அக்கறை செலுத்தவில்லை. போதை பொருள் கடத்தலில் தமிழகம் தலைமை இடமாக உள்ளது பள்ளிக்கூடம் வாசல் அருகே போதை பொருள் விற்பனை ஆகிறது. இன்றைக்கு 2000 கோடி அளவில் போதைப் பொருள்களை பிடித்துள்ளனர் இந்த பொருள் அமெரிக்கா போன்ற நாடுகள் கண்டுபிடிக்கப்பட்டு இந்தியாவிற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.


முதலமைச்சர் இதுவரை வாய் திறக்கவில்லை அதேபோல் 200 கோடி அளவில் மதுரையில் போதைப்பொருள் பிடிபட்டுள்ளது, முதலமைச்சர் விளக்கம் தர முன்வரவில்லை, போதை பொருள் கடத்தலில் திமுகவை சேர்ந்த ஜாபர் நீக்கப்பட்டாலும், முதலமைச்சர் குடும்பத்திற்கும் அவருக்கும் தொடர்பு உள்ளது இந்த குற்றச்சாட்டுக்கு இதுவரை மௌனம் காத்து வருகிறார். இதனால் மக்களுக்கு பெருத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது.


மாநிலத்தின் வளர்ச்சிக்காக ஒரு ரூபாய் கூட மத்திய அரசு இன்னும் வழங்கவில்லை .கொடுக்க முடியாத மனநிலையில் மத்திய அரசும், பெற முடியாத மனநிலையில் திமுக அரசும் உள்ளது இந்த இரண்டு அரசு நமக்கு தேவையில்லை. நிதியமைச்சர் சட்டசபையில் அழகாக தமிழைப் பற்றி பேசினார் ஆனால், தமிழ்நாடு வளர்ச்சிக்கு எந்த முக்கியம் இல்லாமல் உள்ளது. இன்றைக்கு தமிழகத்தின் கடன் சுமையில் இந்தியாவிலேயே முதலிடத்திற்கு முதலமைச்சர் கொண்டு சென்றுள்ளார்.


வரும் தேர்தலில் குறுக்கு வழியில் திமுக செல்லும், அதை மக்கள் ஆதரவுடன் முறியடிப்போம். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாநில அரசு பங்காக 223 ஏக்கர் நிலத்தை அன்று ஒப்படைத்து விட்டோம், அதேபோல் இஸ்ரோ ராக்கெட் தளம் அமைக்க குலசேகரன் பட்டினத்தில் 2,223 ஏக்கர் அன்றைக்கு வழங்கினோம். ஆனால் எய்ம்ஸ் மருத்துவமனையில் நிலம் பெறுவதில் காலதாமதமும், ஜெயிக்கா நிறுவனத்தில் கடன் பெறுவதில் காலதா ஏற்பட்டுள்ளது.


மத்திய மாநில அரசுகள் அறிவிப்புகள் வெறும் காகிதமாக மட்டும் இருக்கிறதோ என்கிற ஒரு நிலையை நாம் பார்க்கிறோம், அதை காகிதத்தில் இருந்து காணாமல் போன அந்த திட்டங்களை எப்போது கண்டுபிடித்து தருவீர்கள் என்பதை இந்த மக்கள் கேள்வியாக வைத்திருக்கிறார்கள், அதற்கு ஒரே வழி தான் இருக்கிறது. எடப்பாடியாரின்  தலைமையிலே 40 தொகுதி நாம் வெற்றி பெறுகிற போது இவர்கள் காகிதத்தில் கொடுத்து காணாமல் போன திட்டங்களை கண்டுபிடித்து செயல்படுத்தி, மக்கள் பயன்பாட்டுக்கு எடப்பாடியார் கொண்டு வருவார் என கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad