மூன்று வருடமாக புகார் அளிக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மதுரையின் முக்கிய பகுதியான மதுரைக் கல்லூரி முன்புறத்தில் சாலை மறியல் நடைபெற்றதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அரசு பேருந்து வாகனங்கள் உள்ளிட்டவைகளை மறித்து அப்பகுதி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டது குறித்து தகவல் இருந்த அப்பகுதி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரிடம் எங்கள் பகுதி மக்கள் பலருக்கும் தொற்று நோய்கள் ஏற்பட்டு வருகிறது இது தொடர்பாக காங்கிரஸ் கவுன்சிலர் ராஜ்பிரதாப்பானிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ஓட்டு கேட்கும் போது அந்த எங்கள் தொகுதி எம்எல்ஏ பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அதற்கு பின்பு தொகுதிக்கு வருவதே இல்லை, இந்த தேர்தலில் யாரும் எங்கள் தெருவிற்குள் ஓட்டு கேட்டு வரக்கூடாது நாங்கள் ஓட்டு போட மாட்டோம் எனக்கூறி காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் தேர்தல் நேரத்தில் இது போன்ற செயல்களை ஈடுபடுவது தவறு, உங்கள் பிரச்சனைகள் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தனர். போலீசாரின் வாக்குறுதியை ஏற்ற பகுதி பெண்கள் சம்பவ இடத்திலிருந்து கலைந்து சென்றனர். மதுரையின் முக்கிய பகுதி நடைபெற்ற இந்த சாலை மறியலால் பெரியார் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுபெரியார் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment