சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது. இன்று மாலை சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பாக இந்த விழிப்புணர்வு பேரணி தொடங்கி நகர வீதிகளில் வந்து மீண்டும் தொடங்கிய இடத்தில் வந்து சேர்ந்தது. பின்னர் 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு குறித்து கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்திற்கு உதவி தேர்தல்அலுவலர் வாடிப்பட்டி தாசில்தார் மூர்த்தி தலைமை தாங்கினார். சோழவந்தான் மண்டல துணை தாசில்தார் தமிழ் எழிலன் முன்னிலை வகித்தார். சோழவந்தான் கிராம நிர்வாக அலுவலர் கோபாலகண்ணன் வரவேற்றார். இதில் கலந்துகொண்டு சிறப்பு செய்த விவேகானந்தா கல்லூரி என் எஸ் எஸ் மாணவர்கள் மற்றும் கல்லூரி முதல்வர் டாக்டர் வெங்கடேசன், பேராசிரியர் அருள்மாறன், தினகரன், அசோக்குமார், சோழவந்தான் சப்-இன்ஸ்பெக்டர் சேகர், கிராமநிர்வாக அலுவலர்கள் ஜெயபிரகாஷ், மணிவேல், கார்த்தீஸ்வரி, ராஜேஸ்வரி, முத்துக்கருப்பன், சிவராமன், மாசாணம் மற்றும் கிராம உதவியாளர்கள் இந்த நூறு சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர் குறித்து பேசினார்கள். கிராம உதவியாளர் முருகன் நன்றி தெரிவித்தார்.
No comments:
Post a Comment