திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் தங்கள் முன்னோர்களின் நினைவாக நடைபெறும் பிதுர் தர்பண நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Friday 9 February 2024

திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் தங்கள் முன்னோர்களின் நினைவாக நடைபெறும் பிதுர் தர்பண நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் தங்கள் முன்னோர்களின் நினைவாக நடைபெறும் பிதுர் தர்பண நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தை மாத மஹாளய பட்ச அமாவாசை தினத்தை முன்னிட்டு நடைபெறும், இது சாந்தி நிகழ்ச்சி நடைபெற்றது.

மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் உள்ள சரவண பொய்கையில் தை மஹாளய பட்ச அமாவாசையை தினத்தை முன்னிட்டு ஏராளமானோர் தங்களின் முன்னோர்களுக்கு ஆத்மா சாந்தியடைய நிகழ்ச்சியில் பிதுர் தர்ப்பணம் செய்தனர். 


ஒவ்வொரு ஆண்டும் மூன்று முறை வரும் மஹாளய பட்ச அமாவாசை தினங்களான ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை  போன்ற நாட்கள் குறிப்பிடத்தக்கது. இந்த வருடம் முதலில் தை மாத அமாவாசை வருவதால் பிதுர் தர்ப்பணம் செய்வது குறிப்பிடத்தக்கது. இறந்த தங்களது முன்னோர்கள் மற்றும் உறவினர்களின் ஆன்மா சாந்தியடைய நிகழ்ச்சியில் தர்ப்பணம் செய்வது வழக்கம் இந்துக்களின் பாரம்பரிய சம்பிரதாய வழக்கம் இதில் ஆறு குளம் கடல் போன்ற நீர்நிலைகளில் தங்களின் முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் செய்வார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad