மதுரை மாவட்டத்தில், பல்வேறு இடங்களில் தை அமாவாசை முன்னிட்டு சிறப்பு தர்ப்பணம். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Thursday 8 February 2024

மதுரை மாவட்டத்தில், பல்வேறு இடங்களில் தை அமாவாசை முன்னிட்டு சிறப்பு தர்ப்பணம்.


மதுரை மாவட்டத்தில், பல்வேறு இடங்களில் தை அமாவாசை முன்னிட்டு வெள்ளிக்கிழமை 09.02.24 அன்று காலை, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் தை அம்மாவாசை, ஆடி அமாவாசை, மகாளயா அமாவாசை ஆகிய நாட்களில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம். அதன்படி, மதுரை, திருப்புவனம், திருவேடகம் ஆகிய இடங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.

மதுரை நகரில் அண்ணா நகர் யானைக் குழாய் அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயத்திலும், மதுரை அண்ணாநகர் வைகை காலனி அருள்மிகு வைகை விநாயகர் ஆலயத்திலும், மதுரை சாத்தமங்கலம் ஆவின் பாலவிநாயகர் ஆலயத்திலும் நாளை காலை தர்ப்பணம் செய்து வைக்கப்படுகிறது. இவை தவிர வைகை ஆற்றங்கரைகளில் உள்ள பகுதிகளில் ஆங்காங்கே தர்ப்பணம் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. தாய், தந்தை இல்லாதவர் அவர்களை நினைத்து அவர்களுக்கு அம்மாவாசை தினங்களில் தர்ப்பணம் கொடுப்பது வழக்கமாக உள்ளது. 


பெண்கள் சிலர் அவருடைய முன்னோர்களை நினைத்து  காய்கறிகளை தானமாக வழங்கி வருகின்றனர். அத்துடன் ஏழை மக்களுக்கு உணவுகளை வழங்கியும், சிவன் மற்றும் பெருமாளுக்கு தீபங்களை ஏற்றியும், பசு மாடுகளுக்கு அகதிகளை வழங்கியும், பிதுக்களுக்கு மரியாதை செய்து வருகின்றனர்.

 மதுரை யானை குழாய் அருள்மிகு முத்துமாரி ஆலயத்தில் நாளை காலை 6:30 மணி முதல் ஏழு முப்பது மணி வரையிலும், மதுரை அண்ணா நகர் வைகை காலனி வைகை விநாயகர் ஆலயத்தில் காலை ஏழு முப்பது மணி முதல் 8 .30 மணி வரையிலும், தர்பணங்கள் நடைபெறும். தர்ப்பணத்திற்கு வருபவர்கள், கருப்பு எள்ளு பாக்கெட், பச்சரிசி, காய்கறிகள் ஆகியவை கொண்டு வந்து, முன்னோருக்கு தர்ப்பணம் செய்யலாம் என, கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

No comments:

Post a Comment

Post Top Ad