வடுகப்பட்டி கிராமத்தில் ஸ்ரீ பகவதிஅம்மன் ஸ்ரீ முத்தாலம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Sunday 11 February 2024

வடுகப்பட்டி கிராமத்தில் ஸ்ரீ பகவதிஅம்மன் ஸ்ரீ முத்தாலம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம்


மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் த.வடுகபட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பகவதிஅம்மன், ஸ்ரீ முத்தாலம்மன், திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முதல் நாள் யாக சாலை பூஜையில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், பூர்ணாஹூதி தீபாராதனை நடைபெற்றது. 

தொடர்ந்து மங்கல இசை முழங்க கோபூஜை, கணபதி பூஜை உள்ளிட்ட சிறப்பு அபிஷேக ஆராதனைகள் யாக வேள்விகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் நாள் காலை மங்கல இசை முழங்க மகா பூர்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ராமேஸ்வரம், அழகர்கோவில், உள்ளிட்ட புனித தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் யாகசாலையை சுற்றி வலம் வந்து கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க கருடன் வானத்தில் வட்டமிட கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.


இதனை தொடர்ந்து கோவில் கருவறையில் அமைந்துள்ள ஸ்ரீ பகவதிஅம்மன்,  ஸ்ரீ முத்தாலம்மன், ஆகிய சுவாமிகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து விழாவிற்கு வருகை தந்த சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பூஜை மலர்களும் அறுசுவை அன்னதானமும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை முத்தால பகவதிஅம்மன் பரிபாலனை அறக்கட்டளை மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad