ஆனையூர் மறுவாழ்வு முகாம் அரசுப் பள்ளி ஆண்டு விழா. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Wednesday 14 February 2024

ஆனையூர் மறுவாழ்வு முகாம் அரசுப் பள்ளி ஆண்டு விழா.

மதுரை மேற்கு பகுதியில் உள்ள ஆனையூர் மறுவாழ்வு முகாம் அரசு துவக்கப் பள்ளியில், ஆண்டு விழா தலைமையாசிரியர் திலகம் தலைமையில் நடைபெற்றது. முகாம் தனி வட்டாட்சியர், செல்வராஜன் முன்னிலை வகித்தார். நிகழ்வில், உதவி ஆசிரியர் டேவிட் ஆழ்வார் வரவேற்றார்.

விழாவில், சிறப்பு விருந்தினராக 19 வது வார்டு கவுன்சிலர் பாபு, மதுரை மாவட்டச் செய்தியாளர் பாண்டியன், முகாம் தலைவர் ரவி, பொருளாளர் அருளேந்திரன், விஷ் டூ விஷ் ஹெல்ப் அறக்கட்டளை விஸ்வநாத் மற்றும் மதுரை ஜீன்யெஸ் சொல்யூஷன்ஸ் நிறுவனர் ஜீன் வால்டர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இதில், மாணவ மாணவியரின் ஆடல் பாடலுடன் நிகழ்ச்சியை துவங்கினர். விழாவில், மாணவ மாணவியரின் பரதநாட்டியம், சிலம்பம், கிராமிய நடனம், நாடகம், கராத்தே, ஆங்கிலம் உரையாடல், நாட்டுப்புற நடனம், யோகா, ஆசனம், கலையரங்க செயல்பாடுகள் முதலியன நடைபெற்றன. மேலும், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் கவிதா நிஷாந்தன், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


விழாவினை, உதவி ஆசிரியர் டேவிட் ஆழ்வார் தொகுத்து வழங்கினார். முடிவில், தலைமை ஆசிரியர் திலகம் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை, சிவபுவனம் நாட்டியாலயா ஆடல் கலைமணி ஜெகதீஸ்வரி சசிதரன், முருகேஸ்வரி, காயத்ரி மற்றும் சூரியன் ஆகியோர் செய்திருந்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad