மேடையில் கப்பு வாங்கினாலும் தான் கௌரவம், கடைகளில் கப்பு வாங்கி தன்னையே பாராட்டிக்கொள்ளும் அண்ணாமலையின் கதை தமிழகத்தில் எடுபடாது. - சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Wednesday 28 February 2024

மேடையில் கப்பு வாங்கினாலும் தான் கௌரவம், கடைகளில் கப்பு வாங்கி தன்னையே பாராட்டிக்கொள்ளும் அண்ணாமலையின் கதை தமிழகத்தில் எடுபடாது. - சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி.


புரட்சித்தலைவி அம்மாவின் 76 வது பிறந்தநாள் முன்னிட்டு, கழக அம்மா பேரவை சார்பில், டி குன்னத்தூரில் உள்ள அம்மா கோவிலில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் துவக்கி வைத்து பேசியதாவது, புரட்சித்தலைவி அம்மாவின் 76 வது பிறந்தநாள் முன்னிட்டு, கழக அம்மா பேரவையின் சார்பில் அன்னதானங்கள், நலத்திட்ட உதவிகள், மருத்துவ முகாம்கள், அதனைத் தொடர்ந்து ரத்ததான முகாம்கள், பேச்சுப்போட்டி, கவிதை போட்டி நடைபெற்று வருகிறது தேர்தல் தேதி அறிவிக்கும் வரை இதுபோல நிகழ்ச்சி நடத்தப்படும்.

நேற்றைய தினம் பல்லடத்தில் பாரத பிரதமர் பொதுக்கூட்டத்தில் பேசினார் அப்பொழுது, புரட்சித் தலைவர் புரட்சித்தலைவி அம்மாவின் தியாகத்தை எடுத்துச் சொல்லி உள்ளார். தமிழகத்தில் எத்தனை தலைவர்கள் வாழ்ந்து இருந்தாலும், இந்த இருபெரும் தலைவரின் சிறப்பு புரட்சித்தலைவர் எடப்பாடியாருக்கும், தொண்டர்களுக்கும் அந்த பெருமையை சாரும்.


தியாகத்தில் மறுவடிவமாக உள்ள அன்னை தெரசாவே அம்மாவின் தொட்டில் குழந்தை திட்டத்தை நேரில் சென்று பாராட்டினார். அதேபோல் சுனாமி தமிழகத்தில் இருந்தபோது மின்னல் வேகத்தில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டார் என்று அமெரிக்க அதிபர் பாராட்டினார். அதே போன்று ஹலாலாரிகில்டனே தமிழகத்தில் வந்து அம்மாவை பாராட்டினார் .அது மட்டுமல்ல அது உலக நாடுகள் எல்லாம் விருதுகளை வழங்கினர் இதில் அம்மாவிற்கு தங்கத்தாரகை விருது வழங்கப்பட்டது.


புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் புகழை சொல்வதற்கு ஆச்சரியம் ஏதும் இல்லை ஏனென்றால், உலக நாடு அம்மாவை பாராட்டியது. 1972 ஆம் ஆண்டு இந்த இயக்கத்தை புரட்சித்தலைவர் தோற்றுவித்தார் இந்த இயக்கத்திற்கு பல்வேறு சிறப்புகள் உள்ளது. இன்றைக்கு பாரத பிரதமர் பாராட்டியிருப்பது அந்த புகழ் இருபெரும் தலைவர்களின் வாரிசாக உள்ள எடப்பாடியாரை சாரும் இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.


அதுமட்டுமல்ல அதை இதே பாரத பிரதமர் அம்மாவின் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை பற்றி நாடாளுமன்றத்தில் பாராட்டினார். அதேபோல் கொரோனா காலகட்டத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக எடப்பாடியாரை  காணோலி காட்சி பிரதமரை  பாராட்டினார். குறிப்பாக கொரோனா காலகட்டங்களில் தடுப்பு ஊசி கண்டுபிடிக்க காலத்தில் கூட தடுப்பு மருந்து ஊசி இலவசம் என்று அறிவித்த ஒரே முதலமைச்சர் எடப்பாடியார் தான். அதிமுகவை ஒரு போதும் தனிமைப்படுத்த முடியாது.


கூட்டணி குறித்து எடப்பாடியார் விரிவாக சொல்லிவிட்டார். இன்றைக்கு திமுக தெருமுனை பிரச்சாரம், திண்ணை பிரச்சாரம் எத்தனை கூட்டங்கள் நடத்தினாலும், தமிழகத்தின் ஜீவாதார பிரச்சினைக்கு காவு கொடுத்து விட்டார்கள்.நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் குரலாக எடுத்து வைக்க தவறி விட்டார்கள். 


இன்றைக்கு மேகதாவது குறித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வில்லை, இரண்டு தினங்கள் முன்பு பாலாறில் ஜெகன் மோகன் ரெட்டி அணைக்கட்டபடும் என்று கூறுகிறார் அதற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை, முல்லைப் பெரியாரின் அணைகட்டும் என்று கேரள முதலமைச்சர் கூறுகிறார் அதற்கும் கண்டனம் தெரிவிக்கவில்லை.


மூன்று முதலமைச்சர்கள் தமிழகத்தின் ஜீவதார உரிமைக்கு எதிராக திட்டம் தீட்டுகிறார்கள் முதலமைச்சர் கண்மூடிக் கொண்டிருக்கிறார் ,தன்னுடைய கூட்டணிக்காக தமிழகத்தின் ஜீவாதார உரிமையை காவு கொடுக்கிறார் என்று மக்கள் அச்சப்படுகின்றனர். எத்தனை பிரச்சாரம் செய்தாலும் ஜீவாதார உரிமை காக்க திமுகவை மக்கள் புறக்கணிப்பார்கள்.


ஸ்டாலின் குரலாக பிரச்சாரம் செய்கிறார்கள் ஆனால் தமிழக உரிமைக் குரலை பேச மறுக்கிறார்கள். அதனால் எடப்பாடியார் தலைமையில் தமிழக உரிமையை மீட்போம், தமிழகம் காப்போம். அதே போல் இன்றைக்கு இஸ்ரோ ஏவுதளம் குலசேகர கோட்டையில் அமைகிறது இதற்காக 2,223 ஏக்கர் நிலத்தை எடப்பாடியார் பெற்று கொடுத்தார் அதற்காக நாங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.


அதேபோல் அண்ணாமலை கப்பு வாங்கி விட்டோம் என்று சொல்கிறார் மேடையில் வாங்கினதா? கடையில் வாங்கினதா என்ற விவாதம் நடைபெறுகிறது .மேடையில் கப்பு வாங்கினால் தான் தமிழக மக்கள் பாராட்டுவார்கள் .கடையில் கப்பு வாங்கினால் கௌரவம் இருக்காது. கடையில் கப்பு வாங்கிக் கொண்டு மேடையில் மேடை வாங்கிவிட்டதாக பாராட்டை எதிர்பார்க்கிறார் அது மக்களிடத்தில் எடுபடாது . திமுகவிற்கு ஆதரவாக கருத்துக் கணிப்பு கட்டாயப்படுத்தி அழுத்தம் கொடுக்கிறார்கள்  என கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad