மதுரையில் வசந்த பஞ்சமி வராகி சிறப்பு பூஜை. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Wednesday, 14 February 2024

மதுரையில் வசந்த பஞ்சமி வராகி சிறப்பு பூஜை.

tuxpi.com.1707931446
மதுரையில் வசந்த பஞ்சமி முன்னிட்டு, கோயில்களில் வராகி சிறப்பு பூஜை நடைபெற்றது. மதுரை அண்ணா நகர், தாசில்தார் நகர், அருள்மிகு சௌபாக்கிய விநாயகர் ஆலயத்தில் அமைந்துள்ள வராகி அம்மன் சன்னதியில், வளர்பிறை பஞ்சமி முன்னிட்டு, வராகி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 

முன்னதாக, பக்தர்களால் வராகி அம்மனுக்கு சண்டி ஹோமமும், அதைத்தொடர்ந்து நவகிரக, லெஷ்மி, தன்வந்திரி, சுதர்ஷன ஹோமங்கள் நடைபெற்றது. தொடர்ந்து, வராகி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், திரவிய பொடி போன்ற அபிஷே திரவியங்களால்,  அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்காரம் நடந்தது. இதை அடுத்து, பக்தர்களுக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு அர்ச்சனைகள் நடைபெற்றது. இதில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.


இதே போல, மதுரை அண்ணா நகர் யானை குழாய் அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயத்தில், வளர்பிறை பஞ்சமி பூஜை நடைபெற்றது. அம்மனுக்கு, வராகி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களால் சிறப்பு பூஜை வழிபாடுகள் நடந்தது. இது அடுத்து, அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு பக்தர்களுக்கு கோவில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஆன்மீக குழுவினர் செய்திருந்தனர்.


மதுரை தாசில்தார் சித்திவிநாயகர் ஆலயத்திலும், வளர்பிறை பஞ்சமியை ஒட்டி, துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, வராஹி அலங்காரத்தில் பூஜைகளை குப்பு பட்டர் செய்தார். 

No comments:

Post a Comment

Post Top Ad