திருமங்கலத்தில் திமுக BLA2 பாக முகவர்களுக்கான கூட்டம். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Sunday, 25 February 2024

திருமங்கலத்தில் திமுக BLA2 பாக முகவர்களுக்கான கூட்டம்.


மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தனியார் திருமண மஹாலில் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திமுக BLA2 பாக முகவர்களுக்கான கூட்டம் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர்  சேடப்பட்டி மு_மணிமாறன்  தலைமையில் நடைபெற்றது. 

இதில் மணிமாறன் பேசுகையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அந்த வார்டுகளில் ஒன்றிய செயலாளர்கள் நகர் நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து மக்களுடன் இணைந்து திண்ணை பிரச்சாரம் செய்ய வேண்டும். சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றோமோ அதேபோல் இந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்று கூறினார். திமுக கட்சியை பற்றி சில தவறான கருத்துக்கள் கூறிவரும் அதிமுக ஆட்சியில் ஒரு நலத்திட்டங்கள் எதுவும் செய்தது இல்லை.


திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் இருக்கிறார் ஆனால் பொதுமக்களை ஏமாற்றி வருகிறார். அதற்கு பதிலடி நீங்கள் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கூறினார். இந்த கூட்டத்தில் நகர் மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார், துணை தலைவர் ஆதவன் அதியமான், நகர செயலாளர் மூ.சி.சோ. ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர் தணபாண்டி தெற்கு ஒன்றிய செயலாளர் மதன் குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad