மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.கோலப்போட்டி, விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாலை திருமங்கலம் ராஜாஜி சிலை அருகில் மாபெரும் பொதுக்கூட்டம் முன்னாள் அதிமுக நகர செயலாளர் ஜே.டி.விஜயன் தலைமையில் நடைபெற்றது.
இதில் சட்டமன்ற எதிர் கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயக்குமார் சிறப்புரை ஆற்றினார்.சிறப்பு விருந்தினராக நடிகர், இயக்குநர் ரவி மரியா கலந்து கொண்டார்.மேலும் திமுக அரசு மக்களை ஏமாற்றி ஆட்சி நடத்தி வருகின்றனர். சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட பட்ஜெட்டில் ஒன்று கூட செயல்படுத்தவில்லை. இதை பற்றி கேள்விகள் கேட்டால் இதுதான் விடியல் ஆட்சி என்று சொல்கிறார்கள். இதை சரி செய்ய மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்க வேண்டும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஆக வேண்டும்.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுகவை தோல்வி அடைய செய்ய வேண்டும் என்று கூறினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாநில கழக மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி, ஒன்றிய செயலாளர் அன்பழகன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தமிழழகன், திருமங்கலம் மாவட்ட அவைத் தலைவர் மு.சி. சோ.முருகன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆண்டிச்சாமி, ஒன்றிய குழு தலைவர் லதா ஜெகன், ஒன்றிய கவுன்சிலர் உச்சப்பட்டி செல்வம், வழக்கறிஞர் பிரிவு தமிழ்செல்வம் முத்துராஜா தகவல் தொழில்நுட்ப பிரிவு விவேக், மற்றும் கட்சி நிர்வாகிகள் கழக நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment