ஒரே நாளில் 154 டன் வேளாண் விளைபொருட்கள் ரூ 42 இலட்சத்திற்கு விற்று சாதனை. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Saturday 10 February 2024

ஒரே நாளில் 154 டன் வேளாண் விளைபொருட்கள் ரூ 42 இலட்சத்திற்கு விற்று சாதனை.


விருதுநகர் மற்றும் கள்ளிக்குடி உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின்  மக்காச்சோளம் கோவைக்கு விற்றுத் தரப்பட்டது, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு விவசாயின் கருப்புகவுனி நெல் ஈரோடுக்கு விற்று தரப்பட்டது, சிவகங்கை  விவசாயியின் RNR ரக நெல்  நெல்லைக்கு விற்று தரப்பட்டது. திருமங்கலத்தைச் சேர்ந்த நான்கு விவசாயிகளின் குதிரைவாலி சென்னைக்கு விற்று தரப்பட்டது.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் விடத்தகுளம் ரோட்டில் அமைந்துள்ள திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று (09.02.2024) கீழ்க்கண்ட விளைபொருட்கள் இ-நாம் ஏலம் மூலம் விற்பனை செய்து தரப்பட்டது. 

  1. விருதுநகர் மற்றும் கள்ளிக்குடி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், பாப்புநாயக்கன்பட்டி, எரிச்சநத்தம், உசிலம்பட்டி ஆகியோரின்  104066 கிலோ மக்காச்சோளம்  ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ 24 க்கும் குறைந்தபட்ச விலையாக ரூ 21.80 க்கும் விலை போனது. இதன் மூலம் 2411690/-க்கு வர்த்தகம் நடைபெற்றது
  2. அரியலூர் மாவட்டம் குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவசாயின் 3510 கிலோ நாட்டுக்கம்பு ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ 66.50 க்கு விலை போனது. இதன் மூலம் 233415/-க்கு வர்த்தகம் நடைபெற்றது.
  3. தங்களாச்சேரி, கொடிக்குளம், விடத்தகுளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மூன்று விவசாயிகளின் 311.800 கிலோ கொப்பரை ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ 85 க்கும் குறைந்தபட்ச விலையாக ரூ 40 க்கும் விலை போனது. இதன் மூலம் 23928/-க்கு வர்த்தகம் நடைபெற்றது.
  4. தஞ்சாவூர் மாவட்டம் அனக்கரை கிராமத்தைச்  சேர்ந்த ஒரு விவசாயியின் 880 கிலோ பாரம்பரிய நெல் ரகமான கருப்புகவுனி  நெல் ஏலத்திற்கு வந்தது அது கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ 62 க்கு விலை போனது. இதன்மூலம் ரூ 54560/-க்கு வர்த்தகம் நடைபெற்றது.
  5. சேடப்பட்டி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் நல்லியதேவன்பட்டி, திருமங்கலம் ஆகியோரின் 19949.550 கிலோ குதிரைவாலி ஏலத்திற்கு  வந்தது. அது கிலோ ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ 43.50 க்கும் குறைந்தபட்ச விலையாக ரூ 42.50 க்கும் விலை போனது. இதன் மூலம் ரூ 863138 க்கு வர்த்தகம் நடைபெற்றது.
  6. சிவகங்கை மற்றும் திருமங்கலத்தைச் சேர்ந்த இரு விவசாயிகளின் 17315 கிலோ RNR ரக நெல் ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ 29.86 க்கும் குறைந்தபட்ச விலையாக ரூ 23.50 க்கும் விலை போனது. இதன் மூலம் 429862/-க்கு வர்த்தகம் நடைபெற்றது.     
  7. கிருஷ்ணபுரம் மற்றும் திருமங்கலத்தைச் சேர்ந்த இரு விவசாயிகளின் 7977 கிலோ அக்ஷயா நெல்  ஏலத்திற்கு வந்தது. அது  கிலோ ஒன்றுக்கு ரூ 30.15 க்கும் குறைந்தபட்ச விலையாக ரூ 28.09 க்கும் விலை போனது. இதன் மூலம் 235466/-க்கு வர்த்தகம் நடைபெற்றது.

 

ஆக மொத்தம் இன்று ஒரே நாளில் ரூ42,52,059/- க்கு வர்த்தகம் நடைபெற்றது. மேலும்  விபரங்களுக்கு G.வெங்கடேஷ், கண்காணிப்பாளர் அவர்களை  9025152075லும் மேற்பார்வையாளரை 9600802823 லும் சந்தை பகுப்பாளரை 8754379755 லும் ஆகிய எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Post Top Ad