திருப்பரங்குன்றம் அருகே நிலையூர் பெரிய கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்தது. - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Tuesday 2 January 2024

திருப்பரங்குன்றம் அருகே நிலையூர் பெரிய கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்தது.


தமிழகத்தில் உள்ள பெரிய கண்மாய்களில் நிலையூர் கண்மாயும் ஒன்று, பாண்டிய மன்னர் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்தக் கண்மாய்க்கு, வீரநாராயண ஏரி என்ற பழங்காலத்து பெயரும் உண்டு. சுமார் 742 ஏக்கர் பரப்பளவும், சுமார் 27 அடி ஆழமும்,  பாலமேடு சாத்தனூர் அணையை விட ஏழு மடங்கு கொள்ளளவு கொண்டது.  இந்த கண்மாயில் பெரியமடை, சின்னமடை, உள்மடை என்று 3 மடைகளும், பெரிய கலுங்கு, சின்னக்கலுங்கு என்று 2 கலுங்கும் கொண்டதாகும். 

ஏறக்குறைய 1712 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி கொண்ட கண்மாயாக உள்ளது. 25 கிராம விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கும், நிலத்தடி நீர் ஆதாரமாகவும் உள்ளது. பாண்டிய மன்னர் காலத்து கண்மாய் என்ற பெருமை கொண்ட போதிலும், கனமழை பெய்யும் பட்சத்திலும், வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் பட்சத்திலுமே கண்மாய் நிரம்பும்.


அந்தவகையில், கடந்த சில ஒரு மாதத்திற்கு முன்பு தொடர் கனமழை பெய்தாலும், வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டதாலும் கண்மாய் நிரம்பியது.  மேலும்,  வைகை அணையில் இருந்து தண்ணீர்  திறக்கப்பட்ட நிலையில் சோழவந்தான், மேலக்கால் வழியாக விளாச்சேரி கால்வாய் மூலம்  உண்மைக்கு தண்ணீர் வந்தடைந்தது இந்த நிலையில். அதனால் கண்மாயில் நீர்மட்டம் உயர்ந்தது.


2010ம் ஆண்டுக்கு பின் 7 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2018-ம் ஆண்டில் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்தது. இந்த நிலையில் கடந்த 4ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தற்போது  01.01. 2024  இன்று காலை கண்மாய் நிரம்பி மறுகால் பாய்த் தொடங்கியது. இதனால், அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். நிலையூர் கண்மாய் நிறைந்து மறுகால் பாய்ந்து செல்லும் தண்ணீர் ஆனது சொக்கநாதன்பட்டி, கப்பலூர் மற்றும் அதை சுற்றிய கண்மாய்களுக்கு செல்கின்றன. அதேசமயம் நீர்வரத்து கால்வாய்களை சுத்தம் செய்ய வேண்டும், சுத்தம் செய்ய தவறும் பட்சத்தில் 50 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் தண்ணீர் புகும் அபாயம் உள்ளது எனவும், கண்மாய் சார்ந்த நீர்பிடிப்பில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். 


மேலும், பலவீனமான கரையை பலப்படுத்த பொதுப்பணித்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

No comments:

Post a Comment

Post Top Ad