அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கம் திறப்பு விழாவிற்கு தயார். - தமிழக குரல் - மதுரை

சமீபத்திய நிகழ்வு

Saturday 13 January 2024

அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கம் திறப்பு விழாவிற்கு தயார்.


மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள குட்டி மேய்கி பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கீழக்கரை கிராமத்தில் 66 ஏக்கர் பரப்பளவில் 44 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு அரசு சார்பில் மிகப் பிரம்மாண்டமான முறையில் இந்தியாவிலேயே முதல் முறையாக வீர விளையாட்டுக்கு என்று தனி ஜல்லிக்கட்டு மைதானம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா காண்பதற்கு தயார் நிலையில் உள்ளது.

இதற்கு கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் என்று தமிழ்நாடு அரசு சார்பில் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த அரங்கத்தை ஜனவரி மாத இறுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இந்த விழாவில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொள்ள உள்ளனர்.


திறப்பு விழா அன்று மிகப் பிரம்மாண்டமான ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி இந்த அரங்கத்தில் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டிற்கும் தமிழர்களுக்கும் எண்ணற்ற பல நலத்திட்ட பணிகளையும் வீரத்திற்கும் பாரம்பரியத்திற்கும் பண்பாட்டிற்கும் முக்கியத்துவம் தந்து தமிழ்நாடு முதலமைச்சர் தமிழக முழுவதும் பல்வேறு முக்கிய பணிகளை திறம்பட செய்து வந்து திராவிட மாடல் ஆட்சி செய்து வருகிறார்.


இந்த ஆட்சியின் ஒரு மைல் கல்லாக இந்திய திருநாட்டில் இதுவரை யாரும் செய்திடாத ஒரு முயற்சியாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டு பாரம்பரியமிக்க பழம் பெருமையை பறைசாற்றக்கூடிய ஜல்லிக்கட்டு கலையரங்கம் கட்டப்பட்டுள்ளது. இந்த அரங்கத்திற்கு முத்தமிழ் அறிஞர் தமிழகத்தை ஐந்து முறை ஆட்சி செய்தவரும் தமிழ்நாட்டில் தடையில்லாமல் ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டு தமிழ்நாட்டில் நிரந்தர ஜல்லிக்கட்டு நடைபெற முழு முயற்சி செய்த டாக்டர் கலைஞர் அவர்களின் பெயர் சூட்டி மேலும் தமிழுக்கும் தமிழ்நாடு மக்களுக்கும் பெருமை சேர்த்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு இப்பகுதி மக்கள் தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து வருகின்றனர். 


ஒரு சில எதிர்க்கட்சிகள் தமிழ்நாட்டில் திராவிட மாடல் மக்களாட்சி நடத்தி வரக்கூடிய தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு திட்டங்களை மக்கள் நல பணிகளை பொறுத்துக் கொள்ள முடியாமல் குறை சொல்வது இயல்பான ஒன்றுதான். தென் மாவட்ட மக்களின் நூற்றாண்டு பெருமையை சொல்லக்கூடிய ஜல்லிக்கட்டுக்கு மேலும் புகழ் சேக்கக் கூடிய வகையில் இந்த அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.


தமிழர்களுக்கும் தமிழர்களின் வீரத்திற்கும் உலக அரங்கில் மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பெருமை சேர்த்துள்ளார் என்று அமைச்சர் பி மூர்த்தி தெரிவித்தார். மேலும் பாலமேடு அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜனவரி 16 ,17 ஆகிய தேதியில் நடைபெறக்கூடிய ஜல்லிக்கட்டு நிகழ்வுகளில் ஏராளமான பரிசுகளும் வழக்கம்போல் வழங்கக்கூடிய உயர் ரக பரிசுகளும் வழங்கப்பட உள்ளது.


இவை அனைத்தும் அந்தந்த கிராம ஜல்லிக்கட்டு விழா கமிட்டி நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு தகுந்த முறையில் சிறந்த காளைகளுக்கும் சிறந்த வீரர்களுக்கும் உபகதாரர்கள் மூலம் பரிசு வழங்கப்பட உள்ளது. வழங்கக்கூடிய பரிசுகள் அனைத்தையும் யார் வழங்கினார்கள் என்பதை பெயருடன் அறிவித்து  வழங்குவதற்கு ஜல்லிக்கட்டு கமிட்டி ஏற்பாடு செய்துள்ளது.


அதுபோல் பரிசு பொருட்கள் அனைத்தும் காளைகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் முறையாக வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளதாக  மேலும் அமைச்சர் பி மூர்த்தி தெரிவித்தார்  இந்த நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, சோழவந்த சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், ஒன்றிய செயலாளர் தன்ராஜ், மாவட்ட திமுக அவை தலைவர் எம்ஆர்எம் பாலசுப்பிரமணியன். திமுக பொதுக்குழு உறுப்பினர் முத்தையன். பேரூராட்சி தலைவர்கள் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், சுமதி பாண்டியராஜன். துணைத் தலைவர்கள் சாமிநாதன், ராமராஜ், செயல் அலுவலர்கள் (அலங்காநல்லூர்) ஜுலான்பானு, (பாலமேடு) தேவி, மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு விழா குழு நிர்வாகிகள் மலைச்சாமி, பிரபு, ஜோதி தங்கமணி. அலங்காநல்லூர் யூனியன் சேர்மன் பஞ்சு அழகு, வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேம் ராஜன், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட வருவாய்த்துறை பேரூராட்சிகள் துறை பொதுப்பணித்துறை ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் பொறியாளர்கள் உள்ளிட்ட பலர் இந்த ஆய்வின் போது உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad