இது குறித்து, ரிஷபம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பழனியப்பன் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு எழுதிய மனுவில், சோழவந்தான் வாடிப்பட்டி பகுதியில் 14 ஆயிரம் ஏக்கர் நெல் நடவு செய்து பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது, களை எடுக்கும் பணிகள் நடந்து வரும் நிலையில் களை எடுப்பதற்கு ஆட்கள் கிடைப்பதில் மிகுந்த சிரமம் உள்ளது. ஊராட்சிகளில், 100 நாள் பணிகளுக்கு ஆட்கள் சென்று விடுவதால் விவசாய பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பதில் சிரமம் உள்ளது.
ஆகையால், வெளியூர்களிலிருந்து ஆட்டோகளில் ஆட்களை அழைத்து வந்து களையெடுக்கும் சூழ்நிலை உள்ளது. இதனால், கூடுதல் செலவினம் ஏற்பட்டு வருகிறது. ஆகையால், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு 100நாள் பணியாளர்களை விவசாய பணிகளுக்கு பயன்படுத்த மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவும், தற்போது களையெடுப்பு பணிகள் நடைபெற்று வரும் சூழலில் உடனடியாக நடவடிக்கை எடுத்து விவசாயிகள் நலனை பாதுகாக்க வேண்டும் என மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment